மேற்கு வங்கத்தில் பாஜகவிற்கு அடித்தளம் அமைக்கும் இரண்டு ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள்

முன்னாள் ஏ.பி.வி.பி. தலைவர் அரவிந்த் மேனனுடன் இணைந்து பிரகாஷ், பாஜகவிற்கான கட்டமைப்பை மேற்கு வங்கத்தில் உருவாக்கி வருகிறார்.

Shyamlal Yadav

பாஜக மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு உ.பி.யில் மாபெரும் வெற்றியை உறுதி செய்த ஷிவ் பிரகாஷ் மேற்கு வங்கத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். முன்னாள் ஏ.பி.வி.பி. தலைவர் அரவிந்த் மேனனுடன் இணைந்து பிரகாஷ், பாஜகவிற்கான கட்டமைப்பை மேற்கு வங்கத்தில் உருவாக்கி வருகிறார்.

டிசம்பர் மாதம் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, தலைமை அலுவலகத்தை டெல்லியில் இருந்து நகர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேற்கு வங்கத்தை தவிர்த்து மேலும் ம.பி, சத்தீஸ்கர், மகாராஷ்ட்ரா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற பகுதிகளிக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இருப்பினும் வங்கத்திற்கான போட்டிகளுக்காக நிரந்தரமாக அவர் அங்கு நிறுத்தப்பட்டுள்ளார். நான் பாஜகவிற்கு வந்த பிரகு 60% நேரத்தை மேற்கு வங்கத்தில் செலவழித்துள்ளேன் என்று அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

நான்கு மாதங்களில் டெல்லியில் நடைபெற்ற கட்சி கூட்டங்களுக்கு மட்டுமே அவர் வந்துள்ளார். உ.பியில் இருந்து வந்த பிரகாஷ் தற்போது வங்கத்தை முழுமையாக பிழையின்றி பேசும் அளவிற்கு மாறியுள்ளார். மேலும் அம்மாநிலத்தின் அனைத்து நிறை குறைகளையும் அவர் அறிந்து வைத்துள்ளார்.

மொரதாபாத்தில், தாக்கூர் குடும்பத்தில் பிறந்த பிரகாஷ் 1986ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் ப்ரச்சாரக்காக இணைந்தார். உத்தகாண்டில் 2000ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். பிறகு மேற்கு உ.பியின் க்‌ஷேத்திர ப்ரசாரக்காக பணியாற்றினார். 2014ம் ஆண்டு தேர்தலில் தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தியதால் பாஜகவின் கூடுதல் பொதுசெயலாளராக செயல்பட்டார். முதலில் ஒடிஷாவில் பணியில் அமர்த்தப்பட்டார். பின்பு பிரகாஷ் மேற்கு வங்க பாஜக விவகாரங்களை கையாள துவங்கினார்.

மேலும் படிக்க : சக்கர நாற்காலியில் அமர்ந்து பிரச்சாரம் மேற்கொள்வேன் – மமதா திட்டவட்டம்

தேசிய பொதுசெயலாளர் கைலாஷ் விஜயராகவா வங்கத்தின் பாஜக பொறுப்பாளராக இருக்கிறார். ஆனால் ப்ரகாஷ் அம்மாநிலத்தில் பாஜகவின் வேரூண்ட முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். மேற்கு வங்கத்திற்கு முதன்முறையாக பிரகாஷ் வருகை தந்த போது பாஜக, தேர்தல் பூத்கள் அமைக்கப்பட்டிருக்கும் 78 ஆயிரம் இடங்களில் அதிக அளவில் கமிட்டிகளை உருவாக்கியுள்ளது. 17500 குறைந்தகாலத்திற்கு பூத் ஊழியர்களாக நியமித்துள்ளது.

அவரது ஆர்.எஸ்.எஸ் தொடர்புகள் மேற்கு வங்கத்தில் பணிபுரியும் பிற சங்க அமைப்புகளுடன் சிறப்பாக ஒருங்கிணைக்க பிரகாஷ்க்கு உதவியுள்ளன. மேற்கு வங்க தேர்தலுக்கு மற்ற மாநிலங்களின் பிரச்சார்கள் களமிறங்கியுள்ளனர், எடுத்துக்காட்டாக உ.பி.யைச் சேர்ந்த சுனில் பன்சால் மற்றும் பீகாரில் இருந்து ரத்னக்கர் பாண்டே ஆகியோர் இங்கே களம் இறக்கப்பட்டுள்ளனர்.

”லோ ப்ரோஃபைலாக இருப்பது தான் வன்முறை நிரம்பிய மேற்கு வங்க அரசியலில் தொடர்ந்து பணியாற்ற உதவியுள்ளது என்று பிரகாஷ் கூறியுள்ளார். மொத்த மாநிலத்தையும் சில நேரங்களில் பாதுகாப்பிற்கு ஆட்கள் யாரும் இல்லாமலும் பயணித்துள்ளார் பிரகாஷ். டெல்லியில் இருந்தபோது, பாஜக மாநிலங்களவை எம்.பி.யான பீகாரின் கோபால் நாராயண் சிங்கின் அசோகா சாலையில் அமைந்திருக்கும் அதிகாரப்பூர்வ இல்லத்தின் பின்புறத்தில் தங்கியிருந்தார்.

வாரணாசியில் இருக்கும் நாயரான மேனனும் வங்க மொழியை தெளிவாக பேசுவார். இந்தூரில் ஏ.பி.வி.பி. ஊழியராக தன்னுடைய பணியை துவங்கினார். பின்பு யுவா மோர்ச்சாவில் பதவி வகித்தார். அந்த சமயத்தின் போது மேற்கு வங்கத்தின் அனைத்து பகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் மேனன். மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுடன் நெருக்கமாக இருந்த அவர், சில சர்ச்சைகளைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டில் டெல்லிக்கு மாற்றப்பட்டார். 2017ம் ஆண்டு குஜராத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார் மேனன் என்று கூறப்படுகிறது. 2018ம் ஆண்டில் தேசிய பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்ட அவர் மேற்கு வங்க தேர்தல் பணிகளுக்காக அனுப்பப்பட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: The rss men fostering bjps bengal parivar

Next Story
மம்தாவின் உயிரைப் பறிக்க பாஜக சதி : தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் புகார்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com