5 மாநில தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்த நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டி (CWC) கூட்டத்தில் மூத்த தலைவர் ஏ கே அந்தோணி பங்கேற்காதது பல கேள்விகளை எழுப்பியது. அவர் வேண்டுமென்றே கூட்டத்தில் பங்கேற்கவில்லை என வதந்திகள் பரவ தொடங்கியது.
ஆனால், அந்தோணியின் மகன் அனில் கே அந்தோனி தனது சமூக வலைதள பக்கத்தில், அப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. சனிக்கிழமை முதலே காய்ச்சல் இருந்தது. கூட்டம் தொடங்குவதற்கு சில மணி நேரம் முன்பே ரிசல்ட் வந்தது. காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க முடியாமல் போனது, தந்தை வருத்தம் தெரிவித்த்தாக பதிவிட்டிருந்தார். இவர் 1984 முதல் காங்கிரஸில் உள்ளார். முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான இவர், 2020 ஆம் ஆண்டிலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
சந்திக்கும் வாய்ப்பு
ஞாயிற்றுக்கிழமை டெல்லி விமான நிலையத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோரை சந்தித்து பேச ஜார்க்கண்ட் மூத்த அரசியல்வாதியான சரியு ராய் ஓடிச் சென்றார். பஞ்சாபில் கட்சி ஆட்சிக்கு வந்ததைக் கொண்டாடுவதற்காக இரண்டு ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களும் அமிர்தசரஸ் நகருக்குச் சென்றுகொண்டிருந்தனர்.
இரண்டு தலைவர்கள் சந்தித்து பேசிய புகைப்படத்தை ட்விட்டர் கணக்கில் பதிவிட்ட ராய், , தேசிய தலைநகருக்கு தனது அடுத்த பயணத்தின் போது ஆம் ஆத்மி தலைமையுடன் முறையான சந்திப்பை மேற்கொள்வேன். 2019 இல், ராய் பாஜகவிலிருந்து வெளியேறியது மட்டுமின்றி அப்போதைய முதல்வர் ரகுபர் தாஸை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக களமிறங்கி தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.
மொழி முக்கியம்
மசோதா தாக்கல் செய்கையில் ஆவணங்கள் ஹந்தி மொழியில் இருந்தாலும் சில நேரங்களில் புரிந்துக்கொள்ள கடினமாகிவிடுகிறது. ஹிந்தி பேசும் எம்பிக்களாலும், மசோதாவின் ஹிந்தி வெர்ஷனில் உபயோகிக்கும் வார்த்தை மற்றும் ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்ப்பதன் காரணமாக மசோதாக்களின் இந்தி பதிப்பைப் புரிந்துகொள்வது கடினமாக உணர்கின்றனர். இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் நடைபெற்ற மாநிலங்களவையின் ஹிந்தி சலாஹ்கர் சமிதியின் கூட்டத்தில் பேசப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட 10 உறுப்பினர்களில் சிலர் ஆவணங்களுக்கு கூகுள் மொழிபெயர்ப்பைப் பயன்படுத்துவதில் உள்ள சிரமங்கள் குறித்தும் கவலை தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த வெங்கையா நாயுடு, இவ்விவகாரத்திற்கு எளிதான ஹிந்தியை பயன்படுத்துவது மட்டுமே ஒரே வழி என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil