கேரளாவில் உள்ள குடும்பஸ்ரீ அமைப்பு அதன் 25 வருடங்களை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் உணவகம் நடத்துவது முதல் தெரு விளக்கு செய்வது வரை கிட்டதட்ட 49 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறு தொழில்களை இந்த அமைப்பு மூலம் மக்கள் செய்கிறார்கள்.
கேரளாவின், எல்.டி.எப் அரசின் மூத்த தலைவர் ஈ.கே. நயினார் வறுமையை ஒழிக்கும் நோக்கில் குடும்பஸ்ரீ என்ற திட்டத்தை கொண்டு வந்தார். இந்நிலையில் இந்த அமைப்பு, விவசாயம், சமையல் தொழில், உணவகம், திருமணங்களை நடத்தும் ஏஜென்சி, தெருவிளக்கு செய்வது, நாப்கின்கள் செய்வது என்று பல்வேறு பணிகள் இந்த அமைப்பு மூலம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் இதன் 25ம் ஆண்டு நினைவு விழாவில், பல்வேறு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில் இந்த அமைப்பு தொடர்பாக உறுப்பினர் ஒருவர் கூறுகையில் “ இது ஒற்றுமை மற்றும் நட்பின் எடுத்துக்காட்டு” என்று கூறினார்.
குடும்பஸ்ரீ அமைப்பின் இந்த விழாவில், அதிக கூச்சல் மற்றும் நிறைய பேச்சு சத்தங்கள் நிறைந்திருந்தது, இது தொடர்பாக ஷைனி கூறுகையில் “ பல்வேறு தரப்பில் இருக்கும் மக்கள் கலந்துகொள்ளும்போது, சில மாற்று கருத்துகள் வருவது இயல்புதான். ஆனால் மற்றவர்களின் நன்மைக்காக முடிவுகளை எடுப்போம்” என்று அவர் கூறினார்.
வறுமையை ஒழிக்க இந்த அமைப்பு உருவாக்கப்பட்டாலும், இது 50 லட்சம் பெண்களின் வாழ்வை மாற்றியிருக்கிறது. 2021ம் ஆண்டில் கேரளாவின் வறுமையால் பாதிக்கப்படும் மக்கள் தொகை 0.71 % . குடும்பஸ்ரீ திட்டம் ஆரம்பிக்கும் முன்பு, கேரளாவின் வறுமையின் நிலை, கிராமப்புறங்களில் 25.76% மற்றும் நகர்புறங்களில் 24.59 % ஆக இருந்தது.
இந்நிலையில் 2011 முதல் 2012, ராஜன் கமிட்டி வறுமை தொடர்பாக நடத்திய ஆய்வில், கிராமபுறங்களில் வறுமையின் சதவிகிதம் 7.3 ஆகவும், நகர்புறங்களில் 5.3 % ஆகவும் இருந்தது.
குடும்பஸ்ரீ அமைப்பு தொடர்பாக கேராளாவின் முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக் கூறுகையில் “ சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் குடும்பஸ்ரீ அமைப்பு பல்வேறு தாக்கத்தை கொண்டு வந்துள்ளது. கேரள மாநிலத்தின் அனைத்து பெண்களையும் அது ஒருங்கிணைத்துள்ளது. இதில் குறைகள் இருந்தாலும், அதை கடந்து இந்த மாற்றம் நடைபெற்றுள்ளது” என்று அவர் கூறினார்.
இந்நிலையில் குடும்பஸ்ரீ அமைப்பின் 46,16,837 உறுப்பினர்களை, 3,09,667 குழுக்களாக பிரிக்கப்படுவர். இந்த சிறிய குழுக்களில் 3 படிநிலை உள்ளது. இரண்டாம் நிலையில், இருக்கும் குழு வார்டு அளவில் இயங்கும். இதைத்தொடர்ந்து 3 வது படி நிலையில் உள்ள குழு அரசுடன் இயங்கும்.
இந்நிலையில் இந்த குழுக்களின் சேமிப்பு மூலம், குழு உறுப்பினர்களுக்கு பணம் வழங்கப்படும். இந்நிலையில் தொடர்ந்து அந்த கடனை அடைத்து வருபவர்களுக்கு வங்கிகளில் லோன் பெறுவதற்கு தகுதி பெறுவர்.
மேலும் குடும்பஸ்ரீ இணையதளத்தில் குறிப்பிட்ட தகவல் பொறுத்தவரையில், 23,852.45 கோடி கடன் இதுவரை அமைப்புக்குள் வழங்கப்படுள்ளது. மேலும் 5,786.69 கோடி வரை பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில், 1,06,162 பழங்குடியின குடும்பங்கள், குடும்பஸ்ரீ அமைப்பாக பயன்பெற்றுள்ளனர். ஐக்கிய நாடுகள் அமைப்பு, வறுமையை நீக்குவது மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கு இது சிறப்பான செயல்திட்டம் என்று 2002ம் ஆண்டு தேர்வு செய்துள்ளது. 2018ம் ஆண்டு அஸர் பைஜானில் இருந்து10 பேர் கொண்ட குழு கேரளவிற்கு சென்று குடும்பஸ்ரீ அமைப்பு உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.