9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையிலும் விஜய் மல்லையா 3 ஆவது திருமணம்!

விஜய் மல்லையாவை ஸ்காட்லாந்து போலீஸார் கைது செய்த போது, அவருடன் பிங்கியும் காவல் நிலையத்திற்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கி விட்டு, வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் விஜய் மல்லையா  விரைவில் 3 ஆவது திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிங் பிஷர் என்ற மதுபான நிறுவனத்தின் முதலாளியாக இருந்தவர் தான் விஜய் மல்லையா. பிரபல தொழிலதிபரான இவர், முக்கிய வங்கிகளில் ரூ. 9 கோடிக்கு மேல் கடன் வாங்கி விட்டு, அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டில் தலைமறைவானார்.

லண்டனில்  விஜய் மல்லையா இருக்கும் இடம் தெரிந்தும், மத்திய அரசால் அவரை கைது செய்ய முடியவில்லை.  அவரை பிடிப்பதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுப்பட்டு வருவதாக தெரிவித்து வருகிறது. அவர் மீது இந்தியாவின் பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளது, இந்நிலையில், மல்லையா 3 ஆவது முறையாக திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிங் பிஷர் ஏர்லைன்ஸில் ஏர் ஹோஸ்ட்ரஸாக இருந்த பிங்கி லால்வானியை 2011 ஆம் ஆண்டு  மல்லையா சந்தித்துள்ளார். இந்தப் பெண்ணை தான் தற்போது அவர் திருமணம் செய்துக் கொள்ள இருக்கிறார்.  இதற்கு முன் மல்லையா,  1986 ஆம் ஆண்டு சமீரா தியாப் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். பின்பு, அவரை விவாகரத்து செய்து விட்டு கடந்த 1993-ம் ஆண்டு ரேகா மல்லையா என்பவரை 2 ஆவதாக திருமணம் செய்தார்.

இந்த 2 பெண்களுடன் இருந்த உறவை முறித்துக் கொண்ட மல்லையா தற்போது மூன்றாவதாக பிங்கி லால்வானியை விரைவில் மணம் முடிக்கிறார். மல்லையாவின் வயது 62 ஆகும்.  இவருக்கும் ஏற்கனவே, சித்தார்த், லீயானா, தன்யா ஆகிய குழந்தைகள் உள்ளனர்.

சமீபத்தில் விஜய் மல்லையாவை ஸ்காட்லாந்து போலீஸார் கைது செய்த போது, அவருடன் பிங்கியும் காவல் நிலையத்திற்கு சென்றது குறிப்பிடத்தக்கது.  கடனை திருப்பி செலுத்தாமல் விஜய் மல்லையா 3 ஆவது திருமணம் செய்துக் கொள்ள இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

 

 

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close