/tamil-ie/media/media_files/uploads/2017/12/1b8afab8-25d4-423e-b261-db22fde9554c-1.jpg)
சிகரங்கள், மலைகள், அடர் காடுகள் என இமயமலை தனியொரு உலகத்தையே தன்னகத்தே கொண்டுள்ளது. அந்த இமயமலையின் அழகை சற்றும் குறையாமல் டெல்லியை சேர்ந்த நித்யா புதராஜா என்ற பெண் புகைப்படங்களாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். அவரின் புகைப்படங்கள் இணையத்தில் செம்ம ஹிட்.
தன்னுடைய இந்த புகைப்படங்கள் குறித்து நித்யா தெரிவிக்கையில், ”5 ஆண்டுகளுக்கு முன்பு, டெல்லியிலிருந்து உத்தரகாண்ட் மாநிலம் சட்டலுக்கு இடம்பெயர்ந்தேன். ட்ரெக்கிங் செல்வது எனக்கு மிகச்சிறந்த பொழுதுபோக்கு. அதுதான் என்னை புகைப்பட கலைஞராக உருவெடுக்க வைத்தது. மலைகளை மட்டும் புகைப்படங்களாக எடுக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், இந்தியாவில் வெளிக்கொணராத பகுதிகளை அதன் அழகியலுடன் புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என நினைத்தேன். அதனால், இமயமலையை சுற்றி புகைப்படங்கள் எடுக்கிறேன்.”, என கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.