நீங்கள் சும்மா தெருவில் நடந்து செல்லும்போது ஆட்டோ ஒன்றில் கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தை இருந்தால் என்ன செய்வீர்கள்? கொஞ்ச நேரம் பதற்றமாகும் இல்லையா? ஆனால், மும்பையில் 26 வயது இளைஞரும் அப்படித்தான் சாலையில் ஆட்டோ ஒன்றில் பச்சிளம் குழந்தையை கண்டிருக்கிறார். சிறிதும் யோசிக்காமல் அவர் செய்த செய்கையை அறிந்தால், நீங்கள் அவரை பாராட்டாமல் இருக்க மாட்டீர்கள்.
மும்பையை சேர்ந்த 26 வயதான ஹேமந்த் ஷர்மா, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கஞ்சுமார்க் கிழக்கு பகுதியில் தனது சகோதரருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையோரம் கைவிடப்பட்ட பிஞ்சு குழந்தையை பார்ப்போம் என அவர் எதிர்பார்க்கவில்லை.
சாலையோரம் உள்ள குப்பைக்கிடங்கின் அருகாமையில் நின்றுகொண்டிருந்த ஆட்டோவில் 15-20 நாட்களேயான பச்சிளம் பெண் குழந்தை சால்வையில் போர்த்தப்பட்டு தனித்து விடப்பட்டிருந்தது. உடனடியாக, காவல் துறையின் தொடர்பு எண்ணான 100-ஐ தொடர்புகொண்டிருக்கிறார். ஆனால், எந்தவித பதிலும் இல்லை.
என்ன செய்வதென்று திகைத்து நிற்காமல் உடனடியாக அந்த குழந்தையின் புகைப்படத்தை தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு மற்றவர்களின் உதவியை நாடினார் ஹேமந்த்.
November 2017
வெகுநேரம் குழந்தையுடன் தனியாக நின்றுகொண்டிருந்த ஹேமந்தை அவ்வழியாக வந்த பலரும் கடந்து சென்றனர். ஆனால், ஒருவரும் உதவிக்கு வரவில்லை.
November 2017
அதில், சிலர் “உனக்கு எதுக்கு இந்த வேலை. சட்ட ரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்”, எனக்கூட எச்சரித்திருக்கின்றனர்.
சமூக வலைத்தளத்தில் பதிவிட்டவுடன் மும்பை போலீஸ் அவரது இருப்பிடத்துக்கு சென்று குழந்தையை மீட்டது.
November 2017