ஒரு ஆண் மகன் இவ்வளவு வரதட்சனை தான் பெற வேண்டும்.. அளந்து சொல்லும் கால்குலேட்டர்!

ஒரு ஆண்மகன் எவ்வளவு வரதட்சனை பெறலாம் என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

ஆன்லைனில் வரதட்சனை கால்குலேட்டர் ஒன்று வலம் வருவது பெண்கள் மத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரதட்சணை என்பது நாட்டில் இருந்து ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதே பலரின் எண்ணம். ஆனால் பெரிய இடத்தை சேர்ந்தவர்கள் சமூதாயத்தில் தங்களை பொருளாதார ரீதியில் பெருமை காட்டிக்கொள்ள வரதட்சணைகளை கொட்டி தருவார்கள்.மறைமுகமாக வரதட்சணை கொடுப்பது, கேட்பது இரண்டுமே சட்டப்படி குற்றமாகும்.

ஆனால், சமீப காலமாக இணையத்தில் வரதட்சணை கால்குலேட்டர் என்று உலா வருகிறது. இந்த கால்குலேட்டரில் ஒரு ஆண்மகனின் கல்வித்தகுதி, சம்பளம், ஜாதி, தோற்றத்தை வைத்து இவ்வளவு வரதட்சணை கேட்கலாம் என்று ஒரு சின்ன பட்ஜெட் வரதட்சனையை பதிலாக கொடுக்கிறது.

//www.dowrycalculator.com/ என்ற இணையதளத்தில் சென்றால் உங்களால் அந்த வரதட்சன்னை கால்குலேட்டரை பார்க்க முடியும். இதில் கொடுத்திருக்கும் ஆப்ஷன்க்ஜளை தேர்வு செய்து அதில் ஒரு ஆண்மகன் எவ்வளவு வரதட்சனை பெறலாம் என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

இந்த கால்குலேட்டர் இன்றைய இளம் சமுதாயத்திடம் பெருமளவில் பேசப்பட்டு வருகிறது. மேலும் சமூகவலைத்தளங்களிலும் வைரலாக பரவி வருகிறது. இதுக்குறித்து கேள்விப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி அவசர அவசரமாக இந்த இணையத்தை முடக்கும் பணியில் இறங்கியுள்ளார். அத்துடன் இந்த கால்குலேட்டர் குறித்து ஆவேசமான கருத்துக்களையும் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

×Close
×Close