பிரதமர் நரேந்திர மோடி கேரளத்தில் வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடங்கிவைக்க 2 நாள்கள் பயணமாக செல்கிறார். இந்தத் திட்டத்திற்காக அவர் திங்கள்கிழமை (ஏப்.24) தொடங்கி 2 நாள்கள் அங்கு இருப்பார்.
இந்நிலையில் அவர் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக மலையாளத்தில் எழுதப்பட்ட மிரட்டல் கடிதம் ஒன்று பா.ஜ.க. மாநில அலுவலகத்துக்கு வந்தது.
அந்தக் கடிதத்தில், “முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்கு ஏற்பட்ட கதியை பிரதமர் மோடி சந்திக்க நேரிடும்” என எழுதப்பட்டிருந்தது. இந்தக் கடிதத்தை மாநில போலீசாரிடம் கட்சியின் தலைவர் கே. சுரேந்திரன் போலீசாரிடம் ஒப்படைத்தார்.
தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியின் பயணத் திட்டம் தொடர்பான தகவல்கள் கசிய விடப்பட்டுள்ளன எனக் குற்றஞ்சாட்டினார்.
இதையடுத்து, கேரள மாநிலத்தில் பயங்கர குழுக்கள் வலிமையுடன் உள்ளன” என்றார். தொடர்ந்து, எஸ்.டி.பி.ஐ, மாவோயிஸ்டுகள், ப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ), மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) உள்ளிட்ட அமைப்புகள் மீதும் குற்றஞ்சாட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த மிரட்டல் கடிதம் தொடர்பாக போலீசார் கொச்சியை சேர்ந்த ஜானி என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது இந்தக் குற்றச்சாட்டுகளை ஜானி மறுத்துள்ளார்.
மேலும் இது தம்முடைய கையெழுத்து இல்லை எனவும் அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“