2024-25 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 230 அறிவித்தார். பல்வேறு துறை, மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து பட்ஜெட்டில் அறிவித்தார். நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக 7-வது முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், மருத்துவ துறை சார்பில் சில அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக உயிர் காக்கும் மருந்துகள் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதுபோன்று வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும். அதன்படி, தற்போது, புற்றுநோய் சிகிச்சைக்கு வழங்கப்படும் 3 மருந்துகளுக்கு சுங்கவரி முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவ உபகரணங்கள் குறித்தும் சில அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். தொடர்ந்து, விரைவில் கர்ப்பப் பை புற்றுநோயை தடுக்க தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“