காங்கிரஸ் 3 முதல்வர்கள் பதவியேற்பு : ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாத் பதவியேற்றார்.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலத்தில் வெற்றிப்பெற்ற 3 காங்கிரஸ் முதல்வர்கள் இன்று பதவியேற்கின்றனர். பதவியேற்பு நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. நீண்ட இழுபறிக்கு பின்னர், இம்மாநிலங்களுக்கான முதல்வர்களது பெயர்களை காங்கிரஸ் கட்சி தேர்வு செய்து அறிவித்தது. ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெல்லாட், மத்தியப்பிரதேச மாநில முதல்வராக கமல்நாத், சத்தீஸ்கர் முதல்வராக பூபேஷ் பாகல் ஆகியோரது பெயர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

காங்கிரஸ் 3 முதல்வர்கள் பதவியேற்பு

இந்நிலையில், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர்கள் இன்று பதவியேற்கவுள்ளனர். இந்த மூன்று நிகழ்வுகளிலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கிறார்.

ராஜஸ்தான் : 

rajasthan cm and deputy cm oath taking, காங்கிரஸ் 3 முதல்வர்கள்

ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெல்லாட்டும், துணை முதலமைச்சராக சச்சின் பைலட்டும், இன்று காலை 10 மணியளவில், ஜெயப்பூர் ஆல்பர்ட் மண்டபத்தில் நடைபெறும் விழாவில் பதவியேற்றார். இந்த விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

மத்திய பிரதேசம் 

madhya pradesh cm and deputy cm oath taking, 3 காங்கிரஸ் முதல்வர்கள்

மத்திய பிரதேசம் முதலமைச்சராக இன்று பிற்பகல் 1.30 மணிக்கு கமல்நாத் பதவியேற்கவுள்ளார். பதவியேற்பு விழா போபால் ஜம்பூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

சத்தீஸ்கர்

Chhattisgarh, madhya pradesh cm and deputy cm oath taking, 3 காங்கிரஸ் முதல்வர்கள்

அதேபோல், சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக பூபேஷ் பாகேல், ராய்ப்பூரில் மாலை 5 மணிக்கு பதவியேற்கவுள்ளார். இந்த 3 முதல்வர்கள் பதவியேற்பு நிகழ்ச்சிகளிலும் ராகுல் காந்தி பங்கேற்கிறார்.

காங்கிரஸ் முதலமைச்சர்கள் பதவியேற்கும் விழாவிற்கு பல்வேறு மாநில முதலமைச்சர்கள், கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close