Advertisment

50 வயதில் 12ம் வகுப்பு தேர்ச்சி அடைந்த சூப்பர்-வுமென்... கனவுகளுக்கு வயது தடையா?

21 வயதில் திருமணம் ; 4 குழந்தைகளுக்கு தாயான பின்பு மண முறிவு... தனி ஆளாக நின்று குழந்தைகளை வளர்த்து ஆளாக்கினாலும் பாதியிலேயே நின்ற படிப்பின் மீதான ஏக்கம் குறையவே இல்லை!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamil news today live

தன்னுடன் படித்த மாணவர்களுடன் அமர்ந்திருக்கும் 50 வயது பாட்டி

Tora Agarwala

Advertisment

Three decades after leaving school, 50-year-old Meghalaya woman clears Class XII : மேகலாயாவில் 12ம் வகுப்பில் தேர்ச்சி அடைந்துள்ளார் 50 வயதான லக்கின்ட்டியூவ் ஷியெம்லியே ( Lakyntiew Syiemlieh) என்பவர். 4 குழந்தைகளுக்கு தாய், 2 குழந்தைகளுக்கு பாட்டி. ஆனாலும் இன்றும் அவர் மாணவர் தான். 30 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிப் படிப்பினை பாதியிலேயே நிறுத்திய அவர் தன்னுடைய கனவை நினைவாக்கியுள்ளார். இது தொடர்பாக அவரிடம் பேசிய போது அவர் 12ம் வகுப்போடு நின்று விட போவதில்லை என்பது மட்டும் உறுதியானது. அவருக்கு பிடித்த மொழியான காசியில் (Khasi) இலக்கியம் படிக்க போகிறார். “நான் கல்வியின் முக்கியத்துவத்தை நன்றாக அறிந்துள்ளேன். கல்வி இல்லையென்றால் நாம் அனைவரும் ஒன்றுமில்லை” என்று போனில் உரையாடினார் ஷியெம்லியே.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க 

கலைப்பிரிவில் இந்த ஆண்டு தேர்வு எழுதிய 24,267 மாணவர்களில் ஷியெம்லியேவும் ஒருவர். அம்மாநில கல்வித்துறை திங்கள் கிழமையன்று தேர்வு முடிவுகளை வெளியிட்டது. “நான் மூன்றாம் டிவிசன் தான் பெற்றேன். ஆனாலும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன்” என்று கூறும் ஷியெம்லியே தன்னுடைய மகன், மகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். தேர்வு முடிவுகள் வெளியானவுடன் என்னுடைய குழந்தைகள் என்னை கட்டிப்பிடித்தும் முத்தம் கொடுத்தும் அவர்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். என்னுடைய வாழ்வில் இது மறக்கவே முடியாத நாள் என்கிறார் ஷியெம்லியே.

1989ம் ஆண்டு கணக்கு பாடத்தில் ஏற்பட்ட தடுமாற்றம் காரணமாக பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார் ஷியெம்லியே.21 வயதில் அவருக்கு திருமணம் நடைபெற்றது. அவருக்கு நான்கு குழந்தைகள். ஆனால் அந்த திருமணம் எதிர்பார்த்தபடி அமையவில்லை என்று கூறும் ஷியெம்லியே தனி நபராக இருந்து நான்கு குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கியுள்ளார். உள்ளூர் பள்ளிக் கூடம் ஒன்றில் மாணவர்களுக்கு காசி மொழியை கற்றுக் கொடுத்தார் அவர்.

2015ம் ஆண்டு வரை மறுபடியும் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற கனவுடன் இருந்த ஷியெம்லியே தன்னுடைய பெயரை மாலை நேர வகுப்பிற்காக ”நேசனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஓப்பென் ஸ்கூலிங்” என்ற திறந்தவெளிப் பள்ளியில் பதிவு செய்தார். இரண்டு வருட போராட்டங்களுக்கு பிறகு 10ம் வகுப்பில் தேர்ச்சி அடைந்தார் அவர். வேலைக்கும் கல்விக்கும் மத்தியில் பெரும் திண்டாட்டத்தை அனுபவித்துள்ளார் அவர்.

12ம் வகுப்பு பாடம் என்று வரும் போது நேரடியாக பள்ளிக்கு சென்று படிக்க விரும்பிய ஷியெம்லியே பாலவன் கல்லூரியில் இணைந்து படித்தார். இரண்டு வருட உழைப்பிற்கு தற்போது வெற்றியும் கிடைத்துள்ளது. 12ம் வகுப்பு மிகவும் முக்கியமானது என்பதால் தான் பள்ளியில் சேர்ந்து படித்தேன் என்கிறார் அவர்.

”எங்களது கல்லூரியில் திருமணம் முடிந்தவர்கள், 30 வயது ஆனவர்கள் கூட வந்து படிக்கின்றனர். ஆனால் 50 வயதில் ஒருவர் 12ம் வகுப்பு தேர்வுக்கு படிப்பது என்பது?” என்று வியப்பில் ஆழ்ந்து பேசுகிறார் அக்கல்லூரியின் முதல்வர் லாரன்ஸ்.

கடந்த ஆண்டு மற்ற மாணவர்களைப் போன்றே ஷியெம்லியேவும் கல்லூரி சீரூடை அணிந்து வகுப்புகளுக்கு வருகை புரிந்துள்ளார். தன்னை விட 30 வயது குறைவான மாணவர்களுடன் படித்த அவர் காசி, அரசியல், பொருளாதாரம், கல்வி மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றை பாடப்பிரிவாக தேர்வு செய்தார். ஷியெம்லியேயை அங்கிருக்கும் குழந்தைகள் ”மெய்” (காசியில் அம்மா) என்றே அழைத்துள்ளனர். நன்றாக பழகிய அவர்களுடன் இணைந்து ஷியெம்லியே நடனம், பாட்டு, சுற்றுலா என்று தன்னுடைய கல்வி கனவை நிறைவேற்றியுள்ளார். பொதுதேர்வுகள் நடைபெற்ற போது ஷியெம்லியேவுக்கு அவருடைய மகள் இபாபைல்லா உதவி புரிந்துள்ளார். இரவு வரை விழித்து படித்தார் ஷியெம்லியே. ஆனாலும் கூட அவருக்கு கிராமத்தில் மேலும் பல முக்கிய பொறுப்புகள் இருந்தது. சுய உதவிக் குழு ஒன்றின் உறுப்பினராகவும், மாஸ்டர் புக் கீப்பராகவும் பணியாற்றி வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Meghalaya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment