Bashaarat Masood
வடக்கு காஷ்மீரின் உரி செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
உரி பகுதியின் ஹத்லங்கா கிராமத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஆங்கிலத்தில் படிக்க: Three militants killed in Uri gunfight near LoC: J&K police
”இராணுவத்தின் சினார் படைப்பிரிவு இரண்டு தீவிரவாதிகளின் உடல்கள் மீட்கப்பட்டதாகக் கூறியது, ஆனால் மூன்றாவது உடலை மீட்டெடுப்பது "எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகிலுள்ள பாகிஸ்தான் போஸ்ட் துப்பாக்கிச் சூடு மூலம் குறுக்கிடப்பட்டது" என்று இராணுவம் தனது எக்ஸ் தளத்தில் கூறியது.
இந்த நடவடிக்கையை ராணுவம், ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகள் இணைந்து நடத்தியதாக ராணுவம் கூறியது.
மேலும், தேடுதல் ஆபரேஷன் தொடர்ந்து நடந்து வருகிறது என்றும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக காலையில், உரியின் ஹத்லங்கா கிராமத்தில் பாதுகாப்புப் படைகளின் கூட்டுக் குழு அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கிய பின்னர் துப்பாக்கிச் சண்டை தொடங்கியதாக எக்ஸ் தளத்தில் போலீசார் தெரிவித்தனர்.
“பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி, ஹத்லங்காவின் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் ராணுவம் மற்றும் பாரமுல்லா காவல்துறைக்கும் இடையே என்கவுன்டர் தொடங்கியுள்ளது. மேலும் தேடுதல் நடவடிக்கை தொடரும்,” என்று ஜம்மு காஷ்மீர் காவல்துறை எக்ஸ் தள பதிவில் கூறியது.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் ஹத்லங்கா உள்ள நிலையில், தீவிரவாதிகள் ஏதேனும் ஊடுருவும் குழுவைச் சேர்ந்தவர்களா என்பது குறித்து போலீஸார் எந்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“