/indian-express-tamil/media/media_files/2025/04/13/iFrk0stTvBseVAR6LyVd.jpg)
புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் ஒரு தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரியும் நபர் ஒருவர், தன்னுடைய உரிமையாளரிடம் வாட்ஸ் ஆப்பில் உரையாடுவதாக நினைத்து ரூ. 5.10 கோடியை ஐந்து தவணையாக ஒரு வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளர்.
இதன் பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் சம்பவம் குறித்து புதுச்சேரி போலீசாரிடம் புகாரளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த வகையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சூழலில், வழக்கில் தொடர்புடைய கேரளாவைச் சேர்ந்த அஜித், முகமது ஷாபி மற்றும் அஜ்மல் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அனைவரும் சுமார் 30-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை தொடங்கி மோசடி செயல்களில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும், கேரளா மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சிலருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இச்சம்பவத்தில், கைது செய்யப்பட்டவர்கள் தங்களுடைய வங்கிக் கணக்குகள் மற்றும் சிம் கார்டு விவரங்களை மோசடிக்காரர்களுக்கு கொடுத்து, 5 சதவீத கமிஷன் பெற்றது கண்டறியப்பட்டது. எனவே, மோசடி செய்யும் நபர்களுக்கு இவ்வாறு உதவ வேண்டாம் என்றும், மோசடிக்காரர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு, போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.