புதுச்சேரியில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு மேலும் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் உத்தரவை பின்பற்றி, புதுச்சேரியில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு மேலும் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை நிதித்துறை சார்பு செயலர் சிவக்குமார் வெளியிட்டுள்ளார். இந்த உத்தரவு அனைத்து துறை தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இதன் மூலம் புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 580 முதல் அதிகபட்சமாக ரூ.6, 800 வரை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 20 ஆயிரம் புதுச்சேரி அரசு ஊழியர்கள் பயன் பெறுவார்கள் எனவும், இதனால் அரசுக்கு ரூ.16 கோடி கூடுதலாக செலவாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“