Advertisment

காரில் வந்த எஸ்.டி.பி.ஐ கட்சிக்காரர் கொலை ; மூன்று ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கைது!

ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவால் ஸ்வாலாஹுதீன் கொல்லப்பட்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் அப்துல் மஜீத் ஃபைஸி

author-image
WebDesk
New Update
girl raped: Three boys arrested

girl raped: Three boys arrested

Shaju Philip

Advertisment

Three RSS workers arrested for SDPI worker’s murder :  செவ்வாய்கிழமை அன்று கண்ணூரில் இந்திய சமூக ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவர் கொலை செய்யப்பட்டார். அவ்வழக்கில் மூன்று ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை காவல்துறை கைது செய்துள்ளது. இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்.டி.பி.ஐ) கட்சி, பாப்புலர் ஃப்ராண்ட் ஆஃப் இந்தியாவின் அரசியல் அமைப்பாகும். சயத் ஸ்வாலாஹுதீன் (30) என்பவர், கண்ணூரில் இருக்கும் கோலயாத் பகுதியை சேர்ந்தவர், வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் அமல்ராஜ் (22), ப்ரபின் பி.கே (23), அம்ற்றூம் அசிகலா (25) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கண்ணூரின் சித்தரிபரம்பா கிராமத்தை சேர்ந்தவர்கள்.

கைது செய்யப்பட்ட மூன்று நபர்களும் இந்த தாக்குதலில் நேரடியாக ஈடுபடவில்லை, ஆனால் தாக்குதல் நடத்தியவர்களுக்கு உதவியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களின் எண்ணிக்கையை நாங்கள் கண்டுபிடித்து வருகிறோம். இரண்டு நாட்களில் தெளிவான தகவல்கள் கிடைத்துவிடும் ”என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

செவ்வாயன்று ஸ்வாலாஹுதினும் அவரது இரண்டு சகோதரிகளும் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரி ஒருவர் கூறினார். இரு சக்கர வாகனம் பின்னால் இருந்து காரைத் தாக்கியது. ஸ்வாலாஹுதீனும் அவரது சகோதரி ரஹிதாவும் வெளியே வந்து என்ன நடக்கிறது என்று பார்த்த போது அவர்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தாக்குதல் நடத்தியவர்கள் ரஹிதாவை அச்சுறுத்தியுள்ளனர். தனது சகோதரரை காப்பாற்ற முயன்றார், ஸ்வாலாஹுதீனுக்கு கழுத்து மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது. ரஹிதாவுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டது.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தப்பித்து சென்றுவிட, உள்ளூர் வாசிகள் ஸ்வாலாஹுதீன் மற்றும் அவரின் தங்கையை தலச்சேரியில் இருக்கும் பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு ஸ்வாலாஹுதீன் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. 2018ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் தொண்டர் ஷியாம பிரசாத் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏழாவது குற்றவாளி ஸ்வாலாஹுதீன் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய சகோதரர் நிசாமுதீனும் இவ்வழக்கில் குற்றவாளியாவார். ஸ்வாலாஹுதீன் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். எஸ்.டி.பி.ஐ தொண்டர் அயூப் மீது ஆர்.எஸ்.எஸ் தாக்குதல் நடத்தியதிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஷியாமபிரசாத் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஸ்வாலாஹுதீன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அமல் ராஜ், அயூப் மீதான தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் அப்துல் மஜீத் ஃபைஸி கூறும் போது, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவால் ஸ்வாலாஹுதீன் கொல்லப்பட்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும் மிகவும் முக்கியமான குடும்பத்தை சேர்ந்த ஸ்வாலாஹுன் 2018ம் ஆண்டு நடைபெற்ற கொலையில் பொய்யாக சம்பந்தப்படுத்தப்பட்டார். சங் பரிவார் இயக்கத்தினருக்கு அந்த குடும்பத்தின் மீது வெறுப்பு என்று கூறுகிறார் அவர்.

கண்ணூர் மாவட்ட பாஜக தலைவர் என். ஹரிதாசன் கூறுகையில், “பின்னணி அரசியலாக இருந்தாலும் சரி, தனிப்பட்ட காரணங்களாக இருந்தாலும் சரி இந்த கொலைக்கு பின்னால் யார் இருக்கின்றார்கள், என்ன காரணம் என்று காவல்துறை கண்டறியட்டும். எங்களின் இயக்கம் இந்த கொலையில் ஈடுபடவில்லை என்று கூறுகிறார்.

அரசியல் எதிரிகளிடம் இருந்து பதில் தாக்குதல்கள் நடைபெறலாம் என்றும் அதற்காக தான் பயப்படுவதாகவும் ஸ்வாலாஹுதீன் தன்னுடைய நண்பர்களிடம் கூறியதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தலச்சேரி காவல் துணைப்பிரிவு அரசியல் கொலைகளுக்காக நன்கு அறியப்பட்டது. கடந்த வாரம் சி.பி.ஐ.(எம்) கோட்டைக்குள், வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருக்கும் போது வெடி விபத்து நிகழ்ந்தது. இந்த தயாரிப்பில் ஈடுபட்ட நான்கு நபர்களையும் காவல்துறை கைது செய்தது. இவர்கள் நான்கு பேரும் சி.பி.ஐ.(எம்) கட்சியை சேர்ந்தவர்கள் தான். அவர்கள் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment