உத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய இளைஞரோடு பழகிய பெண்ணை காவலர்கள் காரில் வைத்து அடிக்கும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
Advertisment
பெண்ணை தாக்கிய காவலர்கள்:
உத்தரபிரதேசம் மீரட் மருத்துவக் கல்லூரி அருகே இளம்பெண் ஒருவர், இஸ்லாமிய இளைஞருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த இந்து அமைப்பினர் சிலர் அவர்களிடம் தகராறில் ஈடுப்பட்டனர். அதன் பின்பு அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் இதுக் குறித்து புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், இஸ்லாமிய இளைஞருடன் பேசிக் கொண்டிருந்த இளம்பெண்ணை அடித்து காருக்குள் எற்றினர். இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் இளம்பெண் ஒருவரை, பெண் போலீஸார் உள்பட 3 போலீஸார் அடித்து ஜீப்பில் ஏற்றிச் செல்வதுடன், நீ இந்துவாக இருந்துகொண்டு ஒரு இஸ்லாமிய இளைஞரோடு ஏன் பழகினாய் என கேட்டு தாக்குகின்றனர்.
இதையடுத்து காவலர்களின் செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்புகள் கிளம்பின. பெண்ணை தாக்கி,இழிவான வார்த்தைகளால் திட்டிய காவலர்லள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்தன
இந்நிலையில், மீரட் நகர காவல்துறை சூப்பிரண்ட் ரண்விஜய் சிங், அந்த வீடியோவில் இருந்த மூன்று போலீசாரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளார். இதுக்குறித்து தனது ட்விட்டர் பக்கத்திலும் ரண்விஜய் சிங் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.