இந்திய புலிகளின் எண்ணிக்கை : கணக்கெடுப்பில் இவ்வளவு சிக்கல்கள் உள்ளதா?

ஏழு புலிகளில் ஒரு புலி வெறும் எண்ணிக்கையில் மட்டும் தான்... உண்மையிலேயே அந்த புலிகள் இருப்பது கேள்விக்குறிதான்.

Jay Mazoomdaar

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் புலிகள் கணக்கெடுப்புமுடிவுகளை அரசு ஜூலை மாதம் 29ம் தேதி அறிவித்தது. இந்தியா முழுவதும் புலிகளின் எண்ணிக்கை 2967 என உயர்ந்துள்ளது என்று அறிவித்துள்ளது மத்திய அரசு. அதில் 2462 புலிகளின் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு வெளியிடப்பட்ட புலிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் இந்த நான்கு ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2015ம் ஆண்டில் மொத்தம் 2226 புலிகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதில் 1635 புலிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.

புலிகளின் எண்ணிக்கைக்கும் வெளியான புகைப்படங்களின் அளவீடுகளையும் ஒப்பிட்டு பார்க்கும் போது வெளியிடப்பட்ட கணக்கில் துல்லியத்தன்மை இல்லை என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் விசாரணையின் மூலம் கண்டறிந்துள்ளது. 15 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை அதிக அளவு உயர்ந்துள்ளது என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. ஆனால் 2015ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையும், புகைப்படங்களும் பல்வேறு சந்தேகங்களை உருவாக்குகிறது.

2015ம் ஆண்டு வெளியிடப்பட்ட எண்ணிக்கையில் சுமார் 221 புகைப்படங்களை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்று பாயலஜிஸ்டுகள் நமக்கு தெரிவிக்கின்றனர். அதாவது ஏற்கனவே கணக்கில் கொள்ளப்பட்ட புலிகளையே நாம் மீண்டும் மீண்டும் பட்டியலில், புகைப்படங்களின் அடிப்படையில் இணைக்கப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

அதாவது புகைப்படங்களின் ஆதாரங்களிலேயே நாம் ஒரு புலியை அந்த பட்டியலில் இணைக்கின்றோம். ஆனால் சில நேரங்களில் அந்த புலிகள் வேறு இடங்களுக்கு செல்லும் போது அதுவும் கேமராவில் பதிவாகிவிடுகிறது. ஆனால் நாம் அதை புதிய புலியாக கணக்கில் எடுத்துக் கொண்டு பட்டியலில் இணைத்து விடுகின்றோம். இது போன்று இதுவரையில் 51 புலிகளின் புகைப்படங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

To read this article in English

புலி குட்டிகள்

பொதுவாக இந்தியப் புலிக்குட்டிகளின் இறப்பு விகிதம் சற்று அதிகம். 12 மாதங்களில் இருந்து 18 மாதங்களுக்குள் இறந்துவிடும் புலிகளின் எண்ணிக்கையும் அதிகம். அதைக் கொண்டும் நாம் புலிகளின் எண்ணிக்கை இவ்வளவு தான் என்ற முடிவுக்கு வந்துவிட இயலாது. இந்த புலிக்குட்டிகளை கணக்கில் கொண்டால் அது 46 என்ற கணக்கை காட்டுகிறது.

புலிகளின் எண்ணிக்கையில் ஏற்படும் பிரச்சனை என்ன?

ஒரு புலி தன்னுடைய வலது மற்றும் இடது பக்களில் தனித்துவமான, வித்தியாசமான கோடுகளை கொண்டிருக்கும். சில கேமராக்களின் வலப்புறம் பதிவாகியிருக்கும். சில இடங்களில் இடப்புறம் பதிவாகியிருக்கும். ஆகவே அந்த இரண்டு புகைப்படங்களையும் கொண்டு ஒரே புலியை இரண்டாக கணக்கிடும் வாய்ப்புகளும் அங்கு அதிகமாக உள்ளது.

ExtractCompare என்ற சாஃப்ட்வேரை கொண்டு தான், புகைப்படங்களில் பதிவாகியிருக்கும் புலிகளை கணக்கிடுகின்றார்கள். சில நேரங்களில் ஒரே புகைப்படத்தில் பதிவாகும் வால் மற்றும் கால்களை கணக்கில் கொண்டு புலிகளின் எண்ணிக்கை கூட்டப்படுகிறது. ஆனால் அது புலிதானா என்று உறுதி செய்யப்பட்டு பின்பு தான் இணைக்கப்பட வேண்டும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close