நெரிசல், கட்டமைப்பு சிக்கல்கள் முதல் சமீபத்திய பாதுகாப்பு குறைபாடுகள் வரை, 65 ஆண்டுகள் பழமையான திகார் சிறை பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. இதையடுத்து அனைத்து கைதிகளையும் நரேலாவில் கட்டப்பட்டு டெல்லியின் 4-வது புதிய சிறை அல்லது டெல்லிக்கு வெளியில் கட்டப்படும் மற்றொரு சிறைக்கு மாற்ற டெல்லி சிறைத்துறை திட்டமிட்டு வருகிறது.
டெல்லியின் மத்திய சிறைகளில், திகார் சிறையில் பிரபல ரவுடிகள், அரசியல்வாதிகள் மற்றும் வி.ஐ.பிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, திகார் சிறையில் 1,273 கைதிகளை அடைக்க முடியும். இது 1958 இல் கட்டப்பட்டது. ஆனால் தற்போது 5,000-6,000 பேர் வரை தங்க வைக்கப்படலாம். ஆனாலும் இதை விட கைதிகளின் எண்ணிக்கை 2 மடங்கு அதிகமாக உள்ளது என்றனர்.
இந்த வளாகம் சிறியதாகவும், பல கைதிகளை தங்க வைப்பதற்கும், பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் ஏற்றதாக இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் இரு தரப்பு ரவுடிகளுக்கு இடையே மோதல், கொலை, கைதிகள் தப்பிச் செல்வதற்கு வழிவகுக்கிறது என்றனர்.
கடந்த மாதம், பிரபல ரவுடி தில்லு தாஜ்பூரியாவை சிறையில் வைத்து மற்றொரு தரப்பு சரமாரியாக தாக்கி கொலை செய்தனர். கூர்மையான ஆயுதங்களை கொண்டு 90-100 முறை குத்தி கொலை செய்தனர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த தமிழக சிறப்பு படை அதிகாரிகள் உட்பட 8க்கும் மேற்பட்ட சிறை காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த குறைபாடுகளைக் கருத்தில் கொண்டு, டெல்லி அரசின் மூத்த அதிகாரிகள், CISF மற்றும் TNSF ஆகியோருடன் பல பல உயர்மட்டக் கூட்டங்களை நடத்தின.
சிறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “திகார் சிறையை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாக நாங்கள் கருதுகிறோம். ரோகினி மற்றும் மண்டோலி சிறைகளுக்கு கைதிகளை மாற்றுவதன் மூலம் நாங்கள் முன்பு நெரிசலைக் குறைக்க முயற்சித்தோம், ஆனால் அது பெரிதாக உதவவில்லை. கட்டிடம் மிகவும் பழமையானது மற்றும் தற்போதைய தொழில்நுட்ப தேவைகளுடன் பொருந்தவில்லை” என்றார்
திகாரை விட இரு மடங்கு அல்லது மூன்று மடங்கு பெரிய சிறை வளாகம். 15,000-18,000 கைதிகளை சுலபமாக தங்க வைக்கும் படி புதிய சிறை வளாகம் அமைக்க ஆலோசனை நடத்தி வருகிறோம். இருப்பினும், புதிய சிறையை கட்டுவதும், திகாரை காலி செய்வதும் எளிதாக இருக்காது என்று அந்த அதிகாரி கூறினார்
பாதுகாப்பு பிரச்சினைகள்
300 ஏக்கருக்கும் அதிகமான திகார் வளாகம் ஒன்பது சிறைகளை உள்ளடக்கியது மற்றும் 2,500 பணியாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், சிறைப் பகுதிகளின் "பள்ளி போன்ற" அமைப்பு மற்றும் சிறைக்குள் திறந்த வெளிகள், அத்துடன் குடியிருப்பு மற்றும் பொது சாலைகளில் இருந்து எளிதில் அணுகக்கூடியது ஆகியவை சிறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்வதில் தொடர்ந்து சவால்களை ஏற்படுத்தியுள்ளன.
சட்டவிரோதமாக பொருட்களை சிறைக்குள் வீசுவது மிகவும் எளிது. டிசம்பர் மற்றும் ஜனவரி இடையே, 350க்கும் மேற்பட்ட தொலைபேசிகளை பறிமுதல் செய்துள்ளோம். திறந்தவெளி பகுதியில் கைதிகள் ஆயுதங்களைத் தயாரிக்கவும், பரிமாறவும் மற்றும் தொலைபேசிகளைப் பயன்படுத்தவும் எளிதாக உள்ளது. பல இடங்களில் ஜாமர்கள் வைக்கப்பட்டும் எதுவும் பயனளிக்கவில்லை என்று அதிகாரிகள் கூறினர். கான்மேன் சுகேஷ் சந்திரசேகர், தில்லு மற்றும் கோகி கும்பலைச் சேர்ந்தவர்களிடமிருந்து பல முறை தொலைபேசிகளைப் பறிமுதல் செய்துள்ளோம் என்றனர்.
1960க்குப் பிறகு கட்டப்பட்ட கண்காணிப்பு கோபுரங்கள் மேம்படுத்தப்படவில்லை. சிறைச்சாலையில் மின்சார ஜாமர்கள், AI அமைப்புகள் அல்லது தடைகளை நிறுவுவதில் சிக்கல்களை எதிர்கொள்கிறோம். இப்போது முழு சிறை கைதிகளையும் நரேலா அல்லது டெல்லிக்கு மாற்ற திட்டமிட்டுள்ளோம் என்று மற்றொரு அதிகாரி கூறினார்.
தற்காலிக நடவடிக்கையாக திகார் சிறைக்குள் உள்ள திறந்தவெளி பகுதிகளில் பொருட்கள் கடத்துவது மற்றும் பிற சட்டவிரோத செயல்களை தடுக்க வலை கவர்கள் அமைக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.