/tamil-ie/media/media_files/uploads/2019/05/template-5.jpg)
tik tok, apple, apple store, download, apple appstore, facebook, instagram, whatsapp, youtube, apps, டிக்டாக், ஆப்பிள் ஐபோன்
ஆப்பிள் ஆப் ஸ்டோரில், அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட ஆப்களில், இன்ஸ்டாகிராம், வாட்சப்பை பின்னுக்கு தள்ளி டிக்டாக் முதலிடத்தில் உள்ளது.
சர்வதேச அளவில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிகமாக டவுன்லோட் செய்யப்பட்ட ஆப்கள் குறித்த சர்வேயை, சென்சார் டவர் நிறுவனம் நிதியாண்டின் நான்கு காலகட்டத்திலும் தனித்தனியாக நடத்தி வருகிறது. அதன்படி, 2019ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிகம் பேரால் டவுன்லோடு செய்யப்பட்ட ஆப்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஆப்பிள் ஆப் ஸ்டோரில், இந்த நிதியாண்டின் முதல் காலகட்டத்தில் அதிகம் பேரால் டவுன்லோடு செய்யப்பட்ட ஆப்களின் பட்டியலில், டிக் டாக் முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்த இடங்களில் யூடியூப், இன்ஸ்டாகிராம், வாட்சப் உள்ளவைகள் உள்ளன.
2018ம் நிதியாண்டின் நான்காம் காலகட்டத்தில் முதல் 5 இடங்களில் இருந்த ஆப்களே, 2019ம் நிதியாண்டின் முதல் காலகட்டத்திலும் அதே இடத்தை தக்கவைத்துள்ளன. பேஸ்புக் ஆப் 5வது இடத்தில் உள்ளது. வீடியோ எடிட்டிங் ஆப் பியூகோ மற்றும் போட்டோ எடிட்டிங் ஆப் பிக்ஸ்ஆர்ட், முதல்முறையாக, முதல் 20 இடங்களுக்குள் வந்துள்ளன. இந்தியாவில் இந்த ஆப்களுக்கு கிடைத்த அதீத வரவேற்பே, இந்த புதிய ஆப்கள், முதல் 20 இடங்களுக்குள் வரக்காரணம் என சென்சார் டவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2019ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவில் மட்டும் புதிதாக 88 மில்லியன் பேர் டிக்டாக் பயன்படுத்த துவங்கியுள்ளனர். இந்தியாவில் மட்டும் 260 மில்லியன் பேர் டிக்டாக் அப்ளிகேசனை பயன்படுத்திவருகின்றனர்.. இந்தியாவில் டிக் டாக் ஆப்பிற்கு தடைவிதிக்கப்பட்டு அது மீண்டும் திரும்ப பெறப்பட்ட நிலையில் இந்த அசுர வளர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.