லக்கிம்பூர் வன்முறை: ஒரு வாரத்தில் கைது செய்ய உ.பி., அரசுக்கு டிகைட் கெடு விதிப்பு!

லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை

உத்தரப் பிரதேசத்தில் லக்கிம்பூர் கெரி வன்முறை சம்பவத்தால் போர்க்களமாக காட்சியளிக்கிறது. இதுவரை, கலவரத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், போராட்டக்காரர்கள் மீது எஸ்யூவி கார் ஏறும் காணொலி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இச்சம்பவத்தில் தொடர்புடைய பாஜகவை சேர்ந்த மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் அவரது மகன் ஆஷிஷ் மிஸ்ராவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என விவசாய தலைவர் ரகேஷ் டிகைட் வலியுறுத்தியுள்ளார்.

வன்முறை நிகழ்ந்த சமயத்தில், லக்னோவுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மோடி, ஏன் இப்பிரச்சினை குறித்து கருத்து தெரிவிக்காமல் அமைதியாக உள்ளார் என காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
லக்கிம்பூர் சம்பவத்தில், உயிரிழந்த நான்கு விவசாயிகளில் மூன்று பேர், அவ்வழியாக வந்த மூன்று எஸ்யூவி கார் மோதி உயிரிழந்துள்ளனர். அதில், ஒன்று மத்திய இணையமைச்சரின் வாகனம் ஆகும்.

மேலும், நான்காவது விவசாயியை அமைச்சர் மிஷ்ராவின் மகன் ஆசிஷ் தான் சுட்டுக்கொன்றதாகவும்  கூறப்படுகிறது. ஆனால், உடற்கூராய்வில் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை
லக்கிம்பூர் வன்முறைக்கு எதிராக பலர் குரல் எழுப்பத் தொடர்ந்ததையடுத்து, விவசாயிகள் மீது ஏற்றியதாகக் கூறப்படும் எஸ்யூவி காரை இயக்கியதாக ஆசிஷ் மீது உ.பி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருப்பினும், துப்பாக்கி சூடு நிகழ்ந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டைக் காவல் துறையினர் மறுத்துள்ளனர்.
இவ்விவகாரம் குறித்து பேசிய ரகேஷ் டிகைட், ” அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டு, அவரது மகனுடன் கைது செய்யப்பட வேண்டும். அரசாங்கம் உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். மிஸ்ராவின் மகனை கைது செய்ய இறுதியாக அரசாங்கத்திற்கு ஒரு வாரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. நான்கு விவசாயிகள் இறந்து 13 நாள்கள் ஆனதும், இதே இடத்தில் மீண்டும் ஒன்றுகூடுவோம். அப்போது, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்போம்” என்றார்.

இந்த சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று உத்தரப் பிரதேச டிஜிபி முகுல் கோயல் கூறினார்.  இந்த சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளின் விசாரணைக்கு உதவுவதற்காக, கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் தலைமையில் இரண்டு காவல் துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் மூன்று இன்ஸ்பெக்டர்  உட்பட ஆறு பேர் கொண்ட குழுவை உபி அரசு அமைத்துள்ளது.
பிடிஐ அறிக்கையின்படி, எஃப்.ஐ.ஆரில் விவசாயிகள் மீது ஏறியதாகக் கூறப்படும் வாகனங்களின் எண் UP 31 AS 1000 மற்றும் UP 32 KM 0036 ஆகும். மூன்றாவது வாகன எண் அதில் குறிப்பிடப்படவில்லை.
லக்கிம்பூர் கெரியில் உள்ள திக்குனியா நிலையத்தில் ஆஷிஷ் மிஸ்ரா மற்றும் 15-20 அடையாளம் தெரியாத நபர்கள் மீது எட்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், கொலை மற்றும் அலட்சியம் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆனால், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மிஸ்ரா, விவசாயிகளின் குற்றஞ்சாட்டு முற்றிலும் பொய்யானது. வன்முறை நிகழ்ந்ததாக கூறப்படும் இடத்தில், எனது மகன் கிடையாது. அவன் என்னுடம் பன்வீர்பூர் கிராமத்தில்  துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற்ற  இடத்திலிருந்தார். இந்த இடம், வன்முறை சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து 4 கிமீ தொலைவில் உள்ளது. அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது என்றார்.அதே சமயம், விவசாயிகளுக்கு ஆறுதல் கூற செல்ல முயன்ற சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், பஞ்சாப் துணை முதல்வர் இருவரும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். 
அதேவேளையில் இன்று, இறந்த விவசாயிகள் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூற காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் குழு இன்று லக்கிம்பூர் செல்கிறது. ஆனால் ராகுல் தலைமையிலான காங்கிரஸ் குழுவுக்கு உத்தரப்பிரதேச மாநில காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tikait gives up government to arrest in one week

Next Story
SC/ST பதவி உயர்வில் ஒதுக்கீட்டை நியாயப்படுத்த என்ன செய்யப்பட்டது? – உச்ச நீதிமன்றம் கேள்விquota in SC/ST promotion, supreme court
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com