scorecardresearch

திகார் சிறையில் ரவுடி கொலை : தமிழக சிறப்பு படை காவல்துறையினர் 7 பேர் பணியிடை நீக்கம்

திகார் சிறையில் பிரபல ரவுடி தில்லு தாஜ்புரியா 4 பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாடு சிறப்பு படை காவல்துறை அதிகாரி 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சிறப்பு படை காவல்துறையினர் 7 பேர் பணியிடை நீக்கம்
சிறப்பு படை காவல்துறையினர் 7 பேர் பணியிடை நீக்கம்

திகார் சிறையில் பிரபல ரவுடி தில்லு தாஜ்புரியா 4 பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாடு சிறப்பு படை காவல்துறை அதிகாரி 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியை சேர்ந்த முக்கிய ரவுடி தில்லு தாஜ்புரியா ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். இதே சிறையில் இவருக்கு எதிரான கோகி கும்பலைச் சேர்ந்த  தீபக், யோகேஷ், ராஜேஷ் ஆகிய 4 பேர் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த 4 பேரும் தில்லு தாஜ்புரியாவை கத்தியால் குத்தி கொலை செய்தனர். கொலை நடந்த பகுதியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் கண்காணிப்பு  பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இது பெரும் விவாதத்தை உருவாக்கியது.

இந்நிலையில் அங்கிருந்த சி.சி.டி.வி கேமிராவை ஆராய்ந்த போது, காயமடைந்த தில்லு தாஜ்புரியாவை, எதிர் தரப்பினர் மீண்டும் தாக்கியதும், தமிழக காவல்துறையினர் எதுவும் செய்யாது இருந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் டிஜிபி சஞ்சய் பெனிவால், சமந்தப்பட்ட 7 காவல்துறை அதிகாரிகளையும் திருமப்பெறுமாறு தமிழக காவல் துறைக்கு கடிதம் எழுதினார். இந்நிலையில் சமந்தபட்ட 7 காவல்துறை அதிகாரியிடம் விசாரணை நடத்துவதாக தமிழ்நாடு சிறப்புப் படை காவல்துறை அதிகாரிகள்  தெரிவித்தனர். இந்நிலையில் இவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Tillu tajpuriya murder fallout 7 tamil nadu cops posted at tihar sent back to state