ராஜீவ் காந்தி கொலை வழக்கு : ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 27 வருடங்கள் சிறையில் தண்டனை அனுபவிக்கும் நளினி, சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 நபர்களையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்று கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 7 பேர் கைது தொடங்கி இந்த 27 வருடங்களில் இந்த வழக்க பயணித்த பாதை பற்றி ஒரு பார்வை.
சென்னைக்கு அருகே உள்ள ஸ்ரீ பெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்தார் ராஜீவ் காந்தி. 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார் ராஜீவ்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு கடந்து வந்த பாதை
ஜூன் 11, 1991 - ல் பேரறிவாளன் கைது செய்யப்பட்டார்
ஜூன் 14, 1991 - ல் நளினியும் முருகனும் கைது செய்யப்பட்டார்கள்
ஜூலை 22, 1991- ல் சாந்தன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 26 நபர்களை கைது செய்தது காவல்துறை.
ஜனவரி 28, 1998 - ல் கைது செய்யப்பட்ட 26 நபர்களுக்கும் தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டது சிறப்பு நீதிமன்றம்
மே 11, 1991 - ல் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகிய நான்கு பேருக்கு மட்டும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மீதம் இருந்த 19 நபர்களையும் தண்டனை காலம் முடிவடைந்ததாக கூறி விடுதலை செய்தனர்.
அக்டோபர் 8, 1999 - ல் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி தங்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் அந்த மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.
அக்டோபர் 10, 1999 -ல் தங்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி பாத்திமா பீவிக்கு கருணை மனுக்களை அனுப்பினார்கள். அக்டோபர் 29, 1999ல் அந்த மனுக்களை தள்ளுபடி செய்தார் ஆளுநர்.
ஏப்ரல் 19, 2000 - ல் மு. கருணாநிதி ஆட்சியின் போது சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் கூடி நளினியின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஏப்ரல் 24ல் அந்த பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட்டு நளினிக்கு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. ஏப்ரல் 26ல் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் தங்களின் தண்டனையை குறைக்க வேண்டும் என குடியரசுத் தலைவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் இவர்களின் கோரிக்கை மனுக்கள் 2000 - 2007 வரை நிலுவையில் வைக்கப்பட்டது.
2006, 2007, 2008 - காலங்களில் பல்வேறு ஆயுள் தண்டனை குற்றவாளிகளுக்கு விடுதலை வழங்கப்பட்டது. இருப்பினும் நளினி, ராபர்ட், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய நால்வருக்கு மட்டும் விடுதலை வழங்கவில்லை. தொடர்ந்து தங்களின் விடுதலை தொடர்பாக மனுக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு வந்தன.
ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் ரிலீஸ்: முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் என தீர்ப்பு
மார்ச் 19, 2008 ல் பிரியங்கா காந்தி நளினியை வேலூர் சிறையில் சந்தித்து பேசினார்.
ஆகஸ்ட் 12, 2011ல் ம் ஆண்டு மூவரின் மரண தண்டனையும் உறுதி செய்யப்பட்டு செப்டம்பரில் தூக்கில் இடலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழங்குத் தொடர்ந்தனர். தூக்கிலிட தடை விதித்தது பின்னர் வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 2014ல் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது. தமிழக அமைச்சரவை ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என ஜெயலலிதா சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார்.
ஏப்ரல் 25, 2014 ல் மத்திய - மாநில அரசின் அதிகாரத்திற்கு கீழ் வருவதால் வழக்கு அரசியல் சாசன பிரிவிற்கு மாற்றப்பட்டது.
2018 செப்டம்பர் 6: 7 பேரையும் விடுவிப்பது குறித்து அரசியல் சாசனத்தில் 161வது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்க வேண்டுமென ரஞ்சன் கோகய் தலைமையிலான உச்ச நீதிமன்ற மூவர் அமர்வு தீர்ப்பளித்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.