Advertisment

டைம்ஸ் குழுமம் நிர்வாகிகளிடம் அமலாக்கத் துறை விசாரணை

உறுதிப்படுத்தும் தகவல்களுக்காக, அமலாக்க இயக்குநரகம், சமீபத்தில் வெளிநாட்டு இடங்களுக்கு முறையான கோரிக்கைகளை அனுப்பியதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆதாரங்கள் உறுதி செய்தன.

author-image
WebDesk
New Update
Times Group

Times Group is under the scrutiny of a Central investigating agency

நாட்டின் மிகப்பெரிய ஊடக நிறுவனங்களில் ஒன்றான பென்னட் கோல்மன் அண்ட் கம்பெனி லிமிடெட் (பிசிசிஎல்) மற்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா குழும வெளியீடுகளின் வெளியீட்டாளர்கள், மத்திய புலனாய்வு ஏஜென்சியின் கண்காணிப்பில் உள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கண்டறிந்துள்ளது.

Advertisment

நிறுவனத்தின் உயர்மட்ட மேலாளர்கள், அமலாக்க இயக்குநரகத்தால் (ED) பல்வேறு கேள்விகளை எதிர்கொண்டுள்ளனர். மேலும் உறுதிப்படுத்தும் தகவல்களுக்காக, அமலாக்க இயக்குநரகம், சமீபத்தில் வெளிநாட்டு இடங்களுக்கு முறையான கோரிக்கைகளை அனுப்பியதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆதாரங்கள் உறுதி செய்தன.

BCCL ஆனது டிஜிட்டல், டிவி மற்றும் ரேடியோ உட்பட பல மொழிகள் மற்றும் தளங்களில் மீடியா மற்றும் பொழுதுபோக்கு பிராண்டுகளின் தொகுப்பை வைத்திருக்கிறது.

கடந்த சில வாரங்களாக, நிறுவனத்தின் நிர்வாகக் குழு (சிஇசி) தலைவர் சிவக்குமார் சுந்தரம் மற்றும் அதன் தலைமை நிதி அதிகாரி (CFO) ஹிமான்ஷு அகர்வால், புது தில்லியில் உள்ள அமலாக்க இயக்குனரக தலைமையகத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஸ்கேனரின் கீழ் BCCL இன் நிதி பரிவர்த்தனைகளில், நிறுவனத்திற்கும் மற்றும் உலகளாவிய வரி புகலிடமான பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் (BVI) உள்ள நிறுவனங்களுக்கு இடையே ரூ.900 கோடிக்கு மேல் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போதைய நிலவரப்படி, அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை (FEMA) மீறியதாகக் கூறப்படும் "விசாரணை" நடத்தப்பட்டு வருவதாகவும், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் அல்ல என்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, ஏஜென்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது, ​​விசாரணை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். விசாரணை தீவிரமடையும் போது மீடியா குழுவில் இருந்து வேறு யார் ஆஜராக வேண்டும் என்பதையும் அவர்கள் விவரிக்கவில்லை.

மேலும், BCCL துணைத் தலைவர் சமீர் ஜெயின் மற்றும் BCCL இன் நிர்வாக இயக்குநர் வினீத் ஜெயின் ஆகியோரிடம், அமலாக்க இயக்குனரகம் சம்மன்கள் மற்றும் பரிசீலனையின் கீழ் உள்ள பரிவர்த்தனைகள் குறித்து அவர்களது கருத்துகளை கேட்பதற்காக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டது. ஆனால் அவர்கள் பதிலளிக்கவில்லை.

நிறுவனத்தின் இருப்புநிலை அறிக்கைகள் (balance sheets) அதன் பல்வேறு குழு நிறுவனங்களில், MX மீடியா கோ லிமிடெட் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் நிறுவனத்தின் நிலை, 2017-18 மற்றும் 2018-19 ஆம் ஆண்டுகளில், தாய் நிறுவனத்தின் 52.35% பங்குகளை வைத்திருக்கும் "துணை" நிறுவனமாகக் காட்டப்பட்டது. இது 2019-2020 மற்றும் 2020-2021 ஆண்டுகளில் தாய் நிறுவனத்தின் பங்கு 40.36% ஆக குறைக்கப்பட்டதன் மூலம் "அசோசியேட்" நிறுவனத்தின் நிலைக்கு மாற்றப்பட்டது.

2019 ஆம் ஆண்டிற்கான வெளிநாட்டு நேரடி முதலீடு குறித்த இந்திய ரிசர்வ் வங்கியின் தாக்கலில், MX Media Co Ltd BVI நிறுவனம், "நிதிக் காப்பீடு மற்றும் வணிகச் சேவைகள்" தொடர்பான ஜாயிண்ட் வென்சுர் ஆக (joint venture) பட்டியலிடப்பட்டுள்ளதையும், மேலும் அதன் பங்கு 35.8 மில்லியன் டாலர் என்பதையும் காட்டுகிறது.

தென் கொரியா, சீனா மற்றும் சிங்கப்பூரில் இணைக்கப்பட்ட BCCL இன் இருப்புநிலைக் குறிப்பில் (balance sheet) பட்டியலிடப்பட்ட குழுவின் பிற "இணை" நிறுவனங்கள் உள்ளன.

நிறுவனங்களின் பதிவாளர் பதிவுகளின்படி, 2019-2020 ஆம் ஆண்டில் BCCL இன் செயல்பாடுகளின் வருவாய் ரூ. 9,611 கோடியாக இருந்தது, இது 2020-21 ஆம் ஆண்டில் கோவிட் ஆண்டில் 44 சதவீதம் சரிந்து ரூ. 5,337 கோடியாக இருந்தது.

2019-20 நிதியாண்டில் ரூ.451 கோடியாக இருந்த நிறுவனத்தின் இழப்பு 2020-21 நிதியாண்டில் ரூ.997 கோடியாக இருமடங்காக அதிகரித்துள்ளது. 2018-2019 நிதியாண்டில் பிசிசிஎல் ரூ.484 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment