Timing of Jagan letter suspect, but no consent for contempt: AG : வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய், ஜெகன் மற்றும் முதல்வரின் தலைமை ஆலோசகர் அஜேயா கல்லம் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பிற்கான செயல்முறைகளை மேற்கொள்ளலாமா என்று அட்டார்னி ஜெனரலுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு முன்னால் இந்த விவகாரம் இருப்பதால் இதனை அவர் கையாள்வது தேவையற்றது என்று குறிப்பிட்டுள்ளார். ரெட்டி மற்றும் கல்லத்தின் செயல்பாடுகள் முரட்டு குணம் கொண்டது. வேண்டுமென்றே கீழ்படியாமலும், கலகம் செய்வதாகவும் இருக்கிறது என்றும் மேற்கோள்காட்டியுள்ளார் அவர்.
உபாத்யாய்க்கு பதில் கடிதம் எழுதிய வேணுகோபால் அதில், ”உங்களின் மனுவை நான் கவனுத்துடன் அணுகினேன். 06.10.2010 அன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டேவுக்கு முதல்வர் எழுதிய கடிதத்தில் மறுக்கதக்க அறிக்கைகள் இருப்பதை நான் அறிந்தேன். அதே கடிதம் அஜெய கல்லத்தினால், முதல்வரின் முதன்மை ஆலோசகர், 10.10.2020 அன்று செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிடப்பட்டது. அந்த கடிதத்தில் இடம் பெற்றிருக்கும் புகார்கள் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நன்றாகவே தெரியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
To read this article in English
16.09.2020-ஆம் ஆண்டு நீதிபதி ரமணா, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து தலைவர்கள் மீது இருக்கும் வழக்குகளை விரைவாக முடிக்க வேண்டும் என்ற உத்தரவினை பிறப்பித்தார். அதன் பின்னணியில், கடிதம் வெளியான நேரம் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பொதுகளத்தில் வைக்கப்படுவது போன்றவை நிச்சயமாக சந்தேகத்திற்கு உரியது. நீங்கள் சுட்டிக்காட்டியுள்ளதைப் போல் முதல்வருக்கு எதிராக 31 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் வேணுகோபால்.
"இந்த பின்னணியில், முதன்மையாக, கூறப்பட்ட நபர்களின் நடத்தை சந்தேகத்திற்குரியது. எவ்வாறாயினும், கவனிக்க வேண்டியது என்னவென்றால், முழு அவமதிப்பு வழக்கும் முதலமைச்சர் நேரடியாக இந்திய தலைமை நீதிபதிக்கு எழுதிய 6.10.2020 தேதியிட்ட கடிதத்திலும், அதைத் தொடர்ந்து கல்லம் வெளியிட்ட அறிக்கைக்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறது. எனவே இந்திய தலைமை நீதிபதி இந்த விஷயத்தை மேற்பார்வையிடுகிறார். எனவே இந்த விஷயத்தை நான் கையாள்வது பொருத்தமானதல்ல. இந்த காரணங்களுக்காக, இந்திய உச்சநீதிமன்றத்தின் குற்றவியல் அவமதிப்புக்கான நடவடிக்கைகளைத் தொடங்க நான் ஒப்புதல் மறுக்கிறேன், ”என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் எழுதியது மற்றும் கல்லம் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிக்கை வெளியிட்டது ஆகியவை உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்தை அவதூறு செய்கிறது மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் நிர்வாகத்தில் தலையிடுவது என்று கூறி அதற்கு ஒப்புதல் வழங்குமாறு உபாத்யாய் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
"இந்த மாதிரியான முன்மாதிரி அனுமதிக்கப்பட்டால், அரசியல் தலைவர்கள் தங்களுக்கு ஆதரவாக வழக்குகளைத் தீர்மானிக்காத நீதிபதிகள் மீது பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளைத் தெரிவிக்கத் தொடங்குவார்கள், இந்த போக்கு விரைவில் நீதிமன்ற சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்கும்" என்று அவர் வாதிட்டார்.
அதில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மீது இருக்கும் வழக்குகளை ஒரு வருடத்திற்கு விசாரித்து, அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்ய வேண்டும் என்று 2016ம் ஆண்டு உபாத்யாய் பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்தார்.
செப்டம்பர் 16 ம் தேதி இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு, இந்நாள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளின் விசாரணையின் முன்னேற்றத்தை கண்காணிக்க சிறப்பு அமர்வு அமைக்குமாறு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளிடம் கோரியது.
இந்த உத்தரவை தொடர்ந்து சொத்து குவிப்பு வழக்கில், ஜெகனுக்கு எதிராக ஹைதராபாத் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் அக்டோபர் 9ம் தேதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு அடுத்த நாளே ரெட்டியின் முதன்மை ஆலோசகர், முதல்வர் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு எழுதிய கடிதத்தை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார். அக்டோபர் 6ம் தேதி அன்று ரமணாவிற்கு எதிராக ஜெகன் எழுதிய கடிதத்தில், ஆந்திர உயர் நீதிமன்ற அமர்வுகளில் செல்வாக்கு செலுத்தி வருகிறார் ரமணா என்று குறிப்பிட்டிருந்தார். சில உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. மேலும் ரமணாவின் நீதித்துறை பொறுப்பு முறையற்றது என்றும், அவரது குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் சில நில பரிவர்த்தனைகள் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அக்டோபர் 17ம் தேதி அன்று அடுத்த தலைமை நீதிபதியாக வர இருக்கும் நீதிபதி ரமணா, ”அனைத்து அழுத்தங்கள் மற்றும் முரண்பாடுகளை தாங்கிக் கொண்டு அனைத்து தடைகளையும் தைரியமாக எதிர்த்து நிற்பது ஒரு நீதிபதிக்கான முக்கிய பண்பு... துடிப்பான, சுதந்திரமான நீதித்துறை தான் இது போன்ற காலக்கட்டங்களில் தேவைப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.