திருப்பதி செல்ல திட்டமா? ஜனவரி மாசத்துல போங்க - அரிய வாய்ப்பு காத்துக்கிட்டு இருக்கு....
TTD plans Vaikunda dwaram opening on Vaikunda ekadesi : திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில், வைகுண்ட ஏகாதசி மற்றும் வைகுண்ட துவாதசி நாட்களில் மட்டும் திறக்கப்படும் பரமபத வாசலை, 10 நாட்கள் கூடுதலாக திறக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
Vaikunda dwaram in Tirupati : திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில், வைகுண்ட ஏகாதசி மற்றும் வைகுண்ட துவாதசி நாட்களில் மட்டும் திறக்கப்படும் பரமபத வாசலை, 10 நாட்கள் கூடுதலாக திறக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
Advertisment
வைகுண்ட ஏகாதசியையொட்டி, வைணவ கோயில்களில் திறக்கப்படும் பரமபத வாசலை கடந்து செல்பவர்களுக்கு மறுபிறப்பு இல்லை என்றும் அவர்கள் நேரடியாக சொர்க்கம் செல்வர் என்பது இந்துக்களின் மறுக்கமுடியாத நம்பிக்கை.
ஜனவரி மாதத்தில் கொண்டாடப்பட்டு வரும் வைகுண்ட ஏகாதசி மற்றும் வைகுண்ட துவாதசி நாட்களில் மட்டுமே, திருலை திருப்பதி கோயிலில், பரமபத வாசல் திறக்கப்படுவது வழக்கம். இந்த வைபவத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திட்டமிட்டு திருப்பதி வருனது வழக்கம். அவர்களில் பெரும்பாலானோருக்கு, பரமபத வாசலை கடக்கும் அதிர்ஷ்டம் கிடைக்காமல் போய்விடுகிறது.
பக்தர்களின் தொடர் கோரிக்கைகளை தொடர்ந்து, திருப்பதி கோயில் நிர்வாகம், பரமபத வாசலை மேலும் 10 நாட்கள் திறந்து வைக்க ஆகம விதிகள் அமைப்பு குழுவிடம் ஆலோசனை மேற்கொண்டது. அவர்களும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பரமபத வாசலை, மேலும் 10 நாட்கள் திறப்பது தொடர்பான நடவடிக்கை, தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தான டிரஸ்ட் ( TTD)டின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.