Advertisment

புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் கட்டணம் வசூலிக்க பா.ஜ.க அரசு முடிவு; வி.சி.க எதிர்ப்பு

கட்டண அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுற்றறிக்கையை திரும்பப்பெற வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் மே 5-ந் தேதி போராட்டம் நடைபெற உள்ளது.

author-image
WebDesk
New Update
Tirumavalavan, VCK, VCK opposed BJP's centre govt decides to collect fee in JIPMER hospital, JIPMER hospital, Puducherry, புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் கட்டணம் வசூலிக்க பா.ஜ.க அரசு முடிவு, போரட்டம் அறிவித்த வி.சி.க, Tirumavalavan, BJP's centre govt decides to collect fee in JIPMER hospital

திருமாவளவனை சந்தித்த புதுவை வி.சி.க

63 வகையான பரிசோதனைகளுக்கு குறைந்தது ரூ.500 ரூபாய் முதல் ரூ.12 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்க ஜிப்மர் இயக்குனர் அனுமதியுடன் மருத்துவ கண்காணிப்பாளர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisment

கட்டண அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுற்றறிக்கையை திரும்பப்பெற வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் மே 5-ந் தேதி போராட்டம் நடைபெற உள்ளது.

போராட்ட அழைப்பிதழை கட்சியின் தேசிய தலைவர் தொல்.திருமாவளவனிடம் சென்னை வேளச்சேரி தாய்மண் அலுவலகத்தில் புதுவை முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் வழங்கினார்.

இந்த சந்திப்பின்போது கட்சியின் புதுவை மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் அரிமா தமிழன், வெளியீட்டு மைய மாநில செயலாளர் பொன்னி வளவன், வானூர் தொகுதி செயலாளர் பால்வண்ணன், வானூர் ஒன்றிய செயலாளர் கலைமாறன், புதுவை சதாசிவம், ஊசுடு தொகுதி பொறுப்பாளர் இளங்கோ ஆகியோர் உடன் இருந்தனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Puducherry Thirumavalavan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment