/indian-express-tamil/media/media_files/HeYhRmUZxa9QR9MDCtwJ.jpg)
/indian-express-tamil/media/media_files/tirupathi-12.jpg)
தரிசன டிக்கெட்டுக்குடன் வரும் பக்தர்களுக்கு தேவைக்கேற்ப லட்டு வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
/indian-express-tamil/media/media_files/tirupathi-3.jpg)
இந்தியா மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்லும் முக்கிய கோவில் திருப்பதி.
/indian-express-tamil/media/media_files/tirupathi-111.jpg)
ஆந்திராவில் அமைந்துள்ள இந்த திருப்பதி பெருமாள் கோவிலில், தினசரி லட்ச கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
/indian-express-tamil/media/media_files/tirupathi-5.jpg)
தினசரி பக்தர்கள் கூட்டம் அலைமோதும் கோவில்களில் ஒன்றாக இருக்கும் திருப்பதியில், வர விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
/indian-express-tamil/media/media_files/tirupathi-8.jpg)
அதேபோல் பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை, கோடைகாலங்களில் திருப்பதியில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும்.
/indian-express-tamil/media/media_files/tirupathi-2.jpg)
இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வரும் திருப்பதியில், சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/tirupathi-4.jpg)
திருப்பதியில் கிடைக்கும் லட்டு உலகளவில் பிரபலமாக இருக்கும் நிலையில், ஒவ்வொரு பக்தருக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே லட்டு தரப்படும்.
/indian-express-tamil/media/media_files/tirupathi-6.jpg)
அதே சமயம் தற்போது சாமி தரிசன டிக்கெட் இருந்தால் தேவைக்கேற்ப லட்டு வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
/indian-express-tamil/media/media_files/HeYhRmUZxa9QR9MDCtwJ.jpg)
தரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு நாளை (செப்டம்பர் 3) முதல் ஒரு லட்டுக்கு ரூ50 வீதம் அன்லிமிட்டெட் லட்டு வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது,
/indian-express-tamil/media/media_files/tirupathi-9.jpg)
சாமி தரிசனம் செய்யாதவர்களுக்கு ஆதார் அடிப்படையில் 2 லட்டு வழங்கப்படும். பக்தர்களுக்கு அன்லிமிட்டெட் லட்டு வழங்கும் பாலிசியை தேவஸ்தான நிர்வாகம் இதுவரை கவனிக்காமல் இருந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.