/tamil-ie/media/media_files/uploads/2018/05/tirupathi-free-darshan.jpg)
tirupati darshan online booking
Tirupathi devasthanam Free darshan Details : திருப்பதியில் பல ஆண்டு காலமாக இலவச தரிசனத்தில் மணிக்கணக்காகக் காத்திருந்து தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு எளிய வசதியைத் தேவஸ்தானம் அமல்படுத்தியுள்ளது. ஆதார் கார்டு மற்றும் அடையாள அட்டை இருந்தால் 2 மணி நேரத்திலேயே இலவச தரிசனம் செய்துவிடலாம் என்ற புதிய திட்டத்தை நேற்று முதல் அமலுக்கு கொண்டு வந்தனர்.
பொதுவாக இலவச தரிசனம் செய்யப் பக்தர்கள் 8 மணி நேரம் வரை காத்திருக்க நேரிடும். சில முக்கிய வழிபாடு நேரங்களில் ஒன்று அல்லது 2 நாட்கள் காத்திருந்த அவல நிலையும் உண்டு. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கியூவில் காத்திருந்து தரிசனம் செய்வதால் சில நேரங்களில் உடல்நிலை பாதிக்கப்படுவதாகவும் கூறி வந்தனர்.
இது போன்ற நிலைகளைத் தவிர்க்க, புதிய திட்டம் குறித்து ஆலோசனை செய்து வந்தது. தர்ம தரிசனம் செய்யும் பக்தர்கள் எளிய முறையில் விரைவில் தரிசனம் செய்ய, ஆதார் மற்றும் அடையாள அட்டை இருந்தால் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்துவிடலாம் என்று அறிமுகப்படுத்தினர். இந்தச் சேவையினால் நேற்று முதல் ஆதார் வைத்திருந்த பக்தர்கள் விரைவில் தரிசனம் செய்யும் கியூவிற்கு மாற்றப்பட்டனர்.
திருப்பதி தேவஸ்தானம் இந்தத் திட்டம் கொண்டு வந்ததைப் பக்தர்கள் வரவேற்றுள்ளனர். தற்போது திருப்பதியில் வி.ஐ.பி. பாஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் நாளையில் இருந்து மேலும் திருப்பதிக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை உயர உள்ளது. இதனால் முன்கூட்டியே திட்டமிட்டு செல்லுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.