/indian-express-tamil/media/media_files/2025/04/14/r1QL4aRLYySCuZqBY0xw.jpg)
தீ விபத்தில் உயிர்தப்பிய மகன்; திருப்பதியில் மொட்டை அடித்து வேண்டிய பவன் கல்யாணின் மனைவி!
ந்திர மாநில துணை முதலமைச்சரும், நடிகருமான பவன் கல்யாணின் 3வது மனைவி அன்னா லெஸ்னேவா. அவர்களுக்கு பொலெனா அஞ்சனா பவனோவா என்ற மகளும், மார்க் சங்கர் என்ற மகனும் உள்ளனர். 2013-ல் இருவருக்கும் திருமணம் நடந்தது முதல் ஹைதராபாத்தில் வசித்து வந்தனர். கடந்த வருடம் நடைபெற்ற ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், தனது குடும்பத்தினரை சிங்கப்பூர் அனுப்பிவிட்டார் பவன் கல்யாண். அங்குள்ள பள்ளிகளில் அவரது குழந்தைகள் படித்து வந்தனர்.
சில நாட்களுக்கு முன்பு மார்க் சங்கர் படித்த பள்ளியில் நடைபெற்ற தீ விபத்தில் மார்ச் சங்கர் காயமடைந்தார். அதிர்ஷ்டவசமாக அவன் உயிர் தப்பினான். சிகிச்சைக்குப் பின் அவர் வீடு திரும்பினார். இதனிடையே, தனது குடும்பத்தினருடன் ஐதராபாத் திரும்பினார் பவன் கல்யாண். மகன் உயிர் பிழைக்கப்பட்டது திருப்பதி ஏழுமலையானின் கருணையினால் என பவனும் அன்னாவும் நம்புகிறார்கள்.
இந்நிலையில், பள்ளியில் நடந்த தீவிபத்தில் இருந்து மகன் உயிர் தப்பிய நிலையில், திருப்பதியில் முடி காணிக்கை கொடுப்பதாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் மனைவி லெஸ்னேவா வேண்டியுள்ளார். இதற்காக நேற்று திருப்பதி சென்ற அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர். லெஜினோவா கிறிஸ்தவர் என்பதால், அதற்கான படிவத்தில் கையெழுத்து பெற்றனர். பிறகு, மொட்டை அடித்து தனது வேண்டுதலை நிறைவேற்றினார். விருந்தினர் மாளிகையில் நேற்றிரவு தங்கிய அவர், வி.ஐ.பி., தரிசனத்தின் மூலம் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.