Advertisment

திருப்பதி லட்டுகள் இனி சென்னையிலும் : தேவஸ்தானம் அறிவிப்பு

மார்ச் 20ம் தேதி முதல் பக்தர்களின் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இ-உண்டியல் மூலம் ரூ 1.79 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர் பக்தர்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
2.4 lakh subsidised Tirupati Laddus sold in Andhra Pradesh on day-one

2.4 lakh subsidised Tirupati Laddus sold in Andhra Pradesh on day-one

Tirupati Sacred Laddus will be available in Chennai, Bengaluru and Hyderabad for devotees says TTD :  கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து புனித தலங்களும் பூட்டப்பட்டு, பக்தர்கள் வருகைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மார்ச் 20ம் தேதியில் இருந்து ஆந்திரா திருப்பதியிலும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் திருப்பதி பிரசாதமாவது பக்தர்களுக்கு கிடைக்க வழி செய்யுங்கள் என்று பக்தர்கள் தொடர்ந்து தேவஸ்தானத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் ஆந்திராவின் அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் திருப்பதி லட்டுகளை மானிய விலைக்கு விற்பனை செய்யும் முடிவை எடுத்துள்ளது திருமலை திருப்பதி தேவஸ்தானம்.

திருப்பதி தேவஸ்தானம் வாரிய தலைவர் யு.வி. சுப்பா ரெட்டி, இன்றும் மூன்று நாட்களில், எப்போது இந்த இடங்களில் லட்டுகள் கிடைக்கும் என்பதை அறிவித்துவிடுவோம் என்று கூறியுள்ளார். லட்டுக்களை வாங்கி, இலவசமாக விநியோகம் செய்ய விரும்பும் பக்தர்கள் தேவஸ்தானத்தின் துணை நிர்வாக தலைவரை 9849575952 மற்றும் 9701092777 இந்த எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

லட்டுவின் விலை ரூ. 50 ஆனால், மானிய விலையில் ரூ. 25க்கு விற்பனை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானம் தகவல் மையங்கள் மற்றும் திருப்பதி தேவஸ்தானம் திருமண மண்டபங்களில் இந்த லட்டுகள் கிடைக்கும்.

திருப்பதி கோவிலில் நிதி தட்டுப்பாடு இருப்பது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பிய போது, நிதி தட்டுப்பாடு ஏதும் இல்லை என்று அவர் பதில் அளித்துள்ளார். அவருடைய இரண்டு மாத சம்பளம் வழங்கப்பட்டுவிட்டது என்றும் மே மற்றும் ஜூன் மாதங்களுக்கும் சம்பளம் வழங்கப்பட்டு விடும் என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Tirupati
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment