Tirumala Tirupati Temple : ஊரடங்கிற்குப் பின், திருப்பதி ஏழுமலையான் கோயில் மீண்டும் திறக்கப்பட்டதிலிருந்து, அர்ச்சர்கர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்று ஊழியர்கள் இதுவரை கொரோனா நோய்க் கிருமிக்கு பலியாகியுள்ளதாtirumala-temple-க அறக்கட்டளையின் நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் முன்னதாக தெரிவித்தார்.
இந்தியாவில் இன்று மட்டும், 62,064 புதிய பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 22 லட்சத்தை தாண்டியது. புதிதாக 1,007 பேர் உயிரிழந்திருப்பதையடுத்து, கோவிட் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44,386 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் தற்போது 6,34,945 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினசரி 12,000-க்கும் குறைவான பக்தர்களை கோவிலுக்குள் நுழைய திருப்பதி தேவஸ்தானம் அனுமதித்து வருகிறது. கடந்த, ஜூலை மாதத்தில் மட்டும் 2.38 லட்சம் பக்தர்கள் திருப்பதி கோயிலுக்கு வருகை புரிந்துள்ளனர்.
சிறப்பு பாதுகாப்பு படை, தேவஸ்தான விஜிலென்ஸ் துறையை சார்ந்த அதிகாரிகள் , அர்ச்சகர்கள் (உதவி பூசாரிகள்), துப்புரவுத் தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், என பல மட்டத்திலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரை, 402 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில், 338 பேர் வெவ்வேறு கோவிட் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருவதாக சிங்கால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திருப்பதி தேவஸ்தானம் அறக்கட்டளையின் கீழ் 300 அர்ச்சகர்கள் உட்பட சுமார் 22,500 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.
இருப்பினும், கோயிலுக்கு வந்த பக்தர்களில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்ற தகவல் இன்னும் வெளிப்படையாகத் தெரியவில்லை.
ஆந்திரா மாநிலத்தின் R0- மதிப்பு தற்போது 1.48 என்ற அளவில் உள்ளது. இந்தியாவின், தேசிய R0 சராசரி மதிப்பு 1.16 மட்டுமே. அதாவது ஆந்திராவில், பாதிக்கப்பட்ட 100 பேர் சராசரியாக, மேலும் 148 நபர்கள் வரை பாதிப்படையச் செய்கிறார். ஜூலை மாதத்தில் மட்டும், அதன் மொத்த கொரோனா பாதிப்பு ஒன்பது மடங்காக அதிகரித்துள்ளது
கடந்த ஜூன் 8ம் தேதி முதல் நாட்டிலுள்ள அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil