டெல்லி போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக் தலைமையிலான குற்றப்பிரிவின் சிறப்பு விசாரணைக் குழு , (எஸ்ஐடி) திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 11 போலீசார்களிடமும், 6 வழக்கறிஞர்களிடமும் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது. இந்த சம்பவம் குறித்து டெல்லி உயர்நீதிமன்றம் நீதி விசாரணைக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்ற வளாகத்தில் என்ன நடந்தது ? என்பதை தெரிந்து கொள்ள காவல்துறையினரின் அறிக்கைகளையும், வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் 'தி இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்' என்ற ஆங்கில நாளிதழ் அணுகி சில செய்திகளையும் வெளியிட்டுள்ளது.
அதிகாரி ஒருவரின் கூற்றுப்படி, மதியம் 1.53 மணியளவில், நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே நின்றிருந்த கான்ஸ்டபிள் பிரதீப் குமார், வழக்கறிஞர் சாகர் ஷர்மாவிடம் வாகனத்தை அகற்றுமாறு கேட்டு இருந்திருக்கிறார்.
சாகருடன் இருந்த லலித் சர்மா தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், நானும், சாகரும், இன்னொரு நண்பரும் அப்போதுதான் ஜீப்பில் இருந்து இறங்கி நடந்து வந்தோம். கான்ஸ்டபிள் பிரதீப் குமார் , உடனே எங்கள் வாகனத்தை அப்புறப்படுத்த கூறினார். பார்க்கிங் ஊழியர்கள் ஐந்து நிமிடங்களில் வந்து இந்த வாகனத்தை அகற்றுவார் என்றும் நாங்கள் கூறினோம் , ஆனால் பிரதீப் குமார் விடபிடியாக நின்றார் " எனக் கூறினார்.
மூத்த அதிகாரி இது குறித்து கூறுகையில், “உரையாடல் விரைவில் மோதலாக மாறியது, சாகர், கான்ஸ்டபிள் பிரதீப் குமாரை அடிக்க முயன்ற போது, மற்ற கான்ஸ்டபிள்கள் சாகரை ஏ.சி.பி இருக்கும் (3 வது பட்டாலியன்) அழைத்துச் சென்றார். ஏ.சி.பி சஹாப் வெளியே வந்து விஷயத்தை சுமூகமாக பேசி, சாகரையும் வெளிவிட்டார் . ” என்று குமார் தனது வாக்குமூலத்தில் , போலீசாரிடம் கூறியதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் , "3 வது பட்டாலியனின் இருக்கும் போலிஸ் பணியாளர்கள் இது குறித்து கூறுகையில், " விஷயம் பதட்டமானதை அறிந்து வந்த அப்பகுதியின் எஸ்.எச்.ஓ - வையும் வழக்கறிஞர்கள் தாக்கினார்கள். கூடுதல் டி.சி.பி (வடக்கு) ஹரிந்தர் சிங் நீதிமன்ற வளாகத்திற்குள் கேட் எண் 2 ல் நுழையும் போது தாக்கப்பட்டார்" என்றார்.
மற்றொரு அதிகாரியின் கூற்றுப்படி, 3 வது பட்டாலியன் உதவி சப்-இன்ஸ்பெக்டர் பூட்டப்பட்ட வாயிலில் இருந்த தனது ரிவால்வரை எடுத்து இரண்டு முறை சுட்டதாகவும், அதில் வழக்கறிஞரை ஒருவரை புல்லட் தாக்கியதாகவும் சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றன" என்று தெரிவித்தார். மேலும், அவர் கூறுகையில், இந்த துப்பாக்கி சம்பவத்திற்கு பிறகு தான் வழக்கறிஞர்கள் வேகமும் , போராட்டமும் அதிகமானது என்று தெரிவித்தார்.
போலீசாரின் கோரிக்கைகள் என்ன ?
கீழ்மட்ட காவல் துறையினற்குக்கு ஆதரவாக ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து போலிஸ் உயரதிகாரி மேல்முறையீடு செய்ய வேண்டும்.
சிறப்பு சி.பி. சஞ்சய் சிங், கூடுதல் டி.சி.பி (வடக்கு) ஹரிந்தர் சிங் மீண்டும் பணியமர்த்தப்படவேண்டும்
கீழ்மட்ட காவல் துறையினருக்காக போலிஸ் நிவாரண மன்றம் உருவாக்கப்பட வேண்டும்
போலீஸ்காரர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட அனைத்து எஃப்.ஐ.ஆர்களும் ரத்து செய்யப்பட வேண்டும்
குற்றம் சாட்டப்பட்ட வழக்கறிஞர்களை அடையாளம் கண்டு கைது செய்ய சாகேத் நீதிமன்ற சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் பயன்படுத்தப்படவேண்டும்.