மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) கோட்டை பிடிப்பது மட்டுமல்லாமல், பா.ஜ.கவுக்கு எதிராகவும் வெற்றி பெறுகிறது என்று தேர்தல் நிலைகள் காண்பிக்கின்றன.
மாநிலத்தின் 42 இடங்களில், டிஎம்சி 32 இடங்களிலும், பாஜக 9 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் முன்னணியில் இருப்பதாக சமீபத்திய முன்னிலை நிலவரங்கள் காட்டுகின்றன. 2019-ல் டிஎம்சி 22 இடங்களிலும், பாஜக 18 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.
டி.எம்.சி நம்பர் 2, டயமண்ட் ஹார்பரில் அதன் வேட்பாளரான அபிஷேக் பானர்ஜி 96,000 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார், அதே நேரத்தில் கட்சியின் சயானி கோஷ் ஜாதவ்பூரில் பாஜக வேட்பாளரை விட 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார், சிபிஎம்-ன் இளைஞர் வேட்பாளர் ஸ்ரீஜன் பட்டாச்சார்யா மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
கடும் போட்டி நிறைந்த பாரக்பூர் தொகுதியில் டி.எம்.சியின் பார்த்தா பௌமிக், பா.ஜ.கவின் அர்ஜுன் சிங்கை எதிர்த்து டி.எம்,சி டர்ன்கோட் முன்னிலையில் உள்ளார். கிருஷ்ணாநகரில் மஹுவா மொய்த்ராவும், செராம்பூரில் கல்யாண் பானர்ஜியும் தங்களுக்கு அருகிலுள்ள பா.ஜ.க போட்டியாளர்களை எதிர்த்து முன்னணியில் உள்ளனர்.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/political-pulse/tmc-holding-fort-gain-bengal-bjp-distant-second-9371492/
கொல்கத்தாவின் உத்தர் தொகுதியில் சுதீப் பானர்ஜியும், பராசத்தில் ககாலி கோஷ் தஸ்திதாரும் இரண்டு சுற்றுகள் எண்ணப்பட்ட நிலையில், மிகவும் முன்னேறி உள்ளனர்.
அசன்சோலில் திரிணாமுல் காங்கிரஸ் நட்சத்திர வேட்பாளர் சத்ருகன் சின்ஹாவை எதிர்த்து பாஜக வேட்பாளர் எஸ்எஸ் அலுவாலியா முன்னிலை வகிக்கிறார். போங்கானில் பாஜக வேட்பாளர் சாந்தனு தாக்கூர் முன்னிலையில் உள்ளார். பிஷ்ணுபூரில் பாஜக வேட்பாளர் சௌமித்ரா கான் மற்றும் புருலியாவில் அதன் வேட்பாளர் ஜோதிர்மாய் சிங் மஹதோ ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். ஆனால் பாசிர்ஹாட்டில், சந்தேஷ்காலி புகழ் ரேகா பத்ரா பின்தங்கியுள்ளார்.
காங்கிரஸின் ஆதிர் சௌத்ரி, டிஎம்சியின் யூசுப் பதானை எதிர்த்து பஹரம்பூரில் சிறிய வாக்கு வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார். அக்கட்சியின் இஷா கான் சவுத்ரி அவர்களின் கோட்டையான மால்டா தக்ஷினிலும் முன்னிலை வகிக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“