Advertisment

பெண்ணுக்கு 'லிப்ட்' கொடுத்து பலாத்கார முயற்சி; தமிழகத்தைச் சேர்ந்த நடன இயக்குனர் கைது: உதவிய ஏ.ஐ சி.சி.டி.வி கேமரா

திங்கள்கிழமை மாலை மாஜிஸ்திரேட் முன்னிலையில் முகேஷை போலீஸார் ஆஜர்படுத்தினர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
AI CCTV

கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நடனக் கலைஞரை ஏ.ஐ தொழில்நுட்பம் கொண்ட சி.சி.டி.வி கேமரா உதவி மூலம் கண்டுபிடித்து பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.

Advertisment

பெங்களூருவில் ஆடுகோடி அருகே உள்ள எஸ்.ஆர்.நகரைச் சேர்ந்த முகேஷ்வரன் என்கிற முகேஷை (24) போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர். முகேஷ் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்கேட்டிங் பயிற்றுவிப்பாளர் மற்றும் நடன நடன கலைஞர் ஆவார் (skating instructor and dance choreographer). இவர் 2003 முதல் தனது குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வருகிறார்.

திங்கள்கிழமை மாலை மாஜிஸ்திரேட் முன்னிலையில் முகேஷை போலீஸார் ஆஜர்படுத்தினர்.

டிசிபி (தென்-கிழக்கு) சாரா பாத்திமா முகேஷ் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார் 

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 1.15 மணியளவில், கல்லூரி மாணவி ஒருவர் தனது நண்பர்களைப் பார்த்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார், அப்போது அவர் முகேஷிடம் லிப்ட் கேட்டுள்ளார். மாணவியை தன் பைக்கில் ஏற்றிய முகேஷ் அவரை வீட்டில் விடாமல் ஒரு தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல்  பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

ஏதோ தவறாக நடப்பதை  சுதாரித்த மாணவி உடனே  SOS அலர்ட்ஐ அனுப்பியுள்ளார். அவரது தந்தை மற்றும் இரண்டு நண்பர்களுக்கு SOS அனுப்பியுள்ளார். அவளது தந்தை ஊரில் இல்லாததால், அவளது நண்பர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அவளை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இவரது நண்பர்கள் வருவதைக் கண்ட முகேஷ் அங்கிருந்து  தப்பி ஓடி உள்ளார்.

எச்.எஸ்.ஆர் லேஅவுட் காவல் நிலையத்தில் பாரதிய நியாய சந்ஹிதாவின் பிரிவு 64 (பாலியல் பலாத்காரம் ) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீஸ் அதிகாரி கூறுகையில், 

""பாதிக்கப்பட்ட பெண் அதிர்ச்சியில் இருந்தார்... இருப்பினும், அவர் எங்களிடம் தெரிவித்தார். அதன் அடிப்படையில், கிட்டத்தட்ட 10 கிமீ சுற்றளவில் உள்ள சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்யத்  தொடங்கினோம். அதில் ஒரு வெள்ளை நிற இருசக்கர வாகனத்தை பார்த்தோம். 

 சிசிடிவி காட்சிகளில், அதிகாலை 2.04 மணியளவில் அந்த நபர் இருசக்கர வாகனத்தை தள்ளுவதை  பார்த்தோம். அதன் பின் அதை எங்களுடைய டேட்டாவுடன் சரிபார்த்தோம். முகேஸ்வரன் பயணித்த பகுதிகளை பார்த்தோம். அதன் பின் அவரை நாங்கள் அடையாளம் கண்டு கைது செய்தோம்”  என்றார். 

மேலும் போலீஸார் கூறுகையில், மாணவி அவரது நண்பர்களுடன் பயணித்த கார்,  ஆட்டோ ரிக்ஷா ஒன்றின் மீது மோதியதையடுத்து இவர் அங்கிருந்து வெளியேறி உள்ளார். மற்றொரு ஆட்டோ ரிக்ஷாவில் ஏறி சிறிது தூரம் சென்று இறங்கியுள்ளார். இதன் பின் முகேஷிடம் லிப்ட் கேட்டு சென்றுள்ளார்.  

அப்போது முகேஷ், இரு சக்கர வாகனத்தை பொம்மனஹள்ளி அருகே ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்று பெண்ணை  பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார் என்று போலீஸார் கூறினர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment