கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள்கள் கடத்தல், குழந்தைகள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் குறித்த தேசிய அளவிலான புள்ளிவிவரங்களை மத்திய குற்றப் பதிவேடு ஆவண காப்பகம் (என்சிஆர்பி) அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
குற்றங்களின் வகைகள், அவை தொடர்பாக பதிவான வழக்குகள், வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள், நிலுவையில் உள்ள வழக்குகள் என பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு, இந்த விவரங்களை என்சிஆர்பி வெளியிட்டு வருகிறது.
தற்போது கடந்த 2017 ஆண்டு நிகழ்ந்த குற்றச் சம்பவங்கள் குறித்த புள்ளிவிவரங்களை என்சிஆர்பி வெளியிட்டுள்ளது. மூன்றாண்டுகளுக்கு பிறகு தற்போது ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் படிக்க - குற்றச் சம்பவங்களில் உ.பி. நம்பர்.1 - தமிழக நிலைமை என்ன? என்சிஆர்பி ரிப்போர்ட்ஸ்
2,039 ஆண்களும் 57 பெண்களும் கொண்ட 2,096 சிறைக் கைதிகள், நாட்டின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், தமிழ்நாட்டில் தான் அதிக எண்ணிக்கையிலான கைதிகளை பதிவு செய்துள்ளது. தேசிய குற்றப் பதிவுகள் பணியகத்தின் தகவல்களின்படி, தமிழகம் 810 கைதிகளைக் கொண்டுள்ளது. குஜராத் (345) மற்றும் கர்நாடகா (211) கைதிகளுடன் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. மொத்த கைதிகளில் இது 38.6%, 16.5% மற்றும் 10.1% ஆகும்.
இந்த மூன்று மாநிலங்களும் மொத்த கைதிகளில் 65.2 சதவிகிதத்தை நிறைவு செய்கின்றன. ஏறக்குறைய 54% கைதிகள் (1,122) 30 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர். அதன்பிறகு 18 வயது முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாக 40.6% (850) பேர் உள்ளனர். 2017 ல் சிறையில் அடைக்கப்பட்ட 16.55 லட்சம் கைதிகளில் 41,378 பேர் தமிழக சிறைகளில் இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2012-2017 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 17.02% அதிகரித்துள்ளது (2012 டிசம்பர் 31 இல் 3,85,135 கைதிகளிலிருந்து 2017 டிசம்பர் 31 அன்று 4,50,696 ஆக அதிகரித்துள்ளது).
கைதிகளில், குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2012-17 காலக்கட்டத்தில் 8.89% aஅதிகரித்துள்ளது. அதேசமயம், undertrails என்றழைக்கப்படும் விசாரணை நிலையும் 21.13% அதிகரித்துள்ளது. கூடவே, கைதிகளின் குற்றம் சாட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை 11.13% அதிகரித்துள்ளது.
டிசம்பர் 31, 2017 நிலவரப்படி இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக, மொத்தம் 396 குற்றவாளிகள் நாட்டின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. மகாராஷ்டிராவில் அதிக எண்ணிக்கையிலான குற்றவாளிகள் (129) உள்ளனர். இரண்டவாது இடத்தில் தமிழகம் (60) உள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட மொத்த கைதிகளில் 32.58%, 15.15% மற்றும் 7.32% பேர் பொது அமைதிக்கு எதிரான குற்றம் சாட்டப்பட்டவர்கள்.
எஸ்.சி.எல் / எஸ்.டி.க்களுக்கு எதிரான குற்றங்களுக்கு பதியப்படும் எஸ்.எல்.எல் வழக்குகளில் அதிக குற்றவாளிகள் கொண்ட மாநிலத்தில் (211) உத்தரபிரதேசம் முதலிடத்தில் உள்ளது.