தேர்தல் ஆணையத்தின் வரலாற்றையே மாற்றி எழுதிய டி.என்.சேஷன்

நேரம் தவறாமையை எப்போதும் கடைபிடித்து வந்தார் சேஷன். இந்த நிமிடத்திற்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றால் அந்த நேரத்தில் அது நடந்தே தீரும்.

TN Seshan passes away
TN Seshan passes away

S K Mendiratta

TN Seshan passes away : திருநெல்லை நாராயணன் சேஷன் இந்திய தேர்தல் ஆணையராக பொறுப்பேற்கும் வரை, இந்திய தேர்தல் ஆணையம் குறித்து ஒரு சாதாரண மனிதனுக்கு மிகவும் குறைவான அறிவே இருந்தது.  இதை என்னால் மிகவும் தெளிவாக கூற இயலும். நான் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய தேர்தல் ஆணையத்தில் பணியாற்றினேன்.

1990ம் ஆண்டு சேஷன் இந்த பணியில் சேரும் போதும் நான் அங்கு பணியாற்றினேன். இந்திய தேர்தல் ஆணையம் குறித்த பயத்தை அரசியல் கட்சிகளுக்கு, வேட்பாளர்களுக்கு அரசாங்கத்திற்கு அவர் உருவாக்கினார். அரசு அவருடைய அதிகாரத்தை குறைக்கும் வகையில் தேர்தல் ஆணையத்தில் கூடுதலாக ஆணையர்களை நியமனம் செய்தது.  தேர்தல் ஆணையத்தில் இவர் முக்கிய பங்கு வகித்த போது தேர்தல் ஆணையம் புதிய உயரத்தை எட்டியது. தேர்தல் ஆணையம் குறித்து யாருக்கும் எந்த விதமான சிரத்தையும் இல்லாத காலங்களையும் நான் பார்த்திருக்கின்றேன். எங்களால் ஒரு ப்யூனைக் கூட சொந்தமாக நியமிக்க இயலாது. எங்களுடைய கடிதம், அறிக்கைகள் அனைத்தும் மத்திய மற்றும் மாநில அரசுகளால் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டது.

To read this article in English

தேர்தல் ஆணையத்தில் பல்வேறு மாற்றங்களை அவர் உருவாக்கினர். தேர்தல் ஆணையத்திற்கும் மாநில அரசுக்கும் இடையேயான உறவை முற்றிலுமாக மாற்றினார் என்பதை உறுதியாக கூற இயலும். 1990ம் ஆண்டு தேர்தல் பேனல், மேற்கு வங்கத்திற்கான தலைமை தேர்தல் தலைவரை தேர்வு செய்வதில் பெறும் சவாலை சந்தித்தது.

மேற்கு வங்க மாநிலம் தேர்தல் ஆணையத்துடன் ஒத்துப்போகவில்லை. தேர்தல் ஆணையம் அறிவித்த அதிகாரிகளை குறிப்பிட்ட இடங்களில் பணியில் அமர்த்த மறுத்துவிட்டது மேற்கு வங்க அரசு. இதனைத் தொடர்ந்து மேற்கு வங்கத்துடனான அனைத்து தொடர்பினையும் முற்றிலுமாக நிறுத்திக் கொண்டார் சேஷன். பிறகு நீதிமன்றம் நேரடியாக தலையிட்டு மேற்கு வங்க மாநிலம் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை பின் தொடர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

நேரம் தவறாமையை எப்போதும் கடைபிடித்து வந்தார் சேஷன். இந்த நிமிடத்திற்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றால் அந்த நேரத்தில் அது நடந்தே தீரும். அதன் பின்பு ஒரு நிமிடம் கால தாமதமாக அதிகாரிகள் வந்தாலும் அவர்களுக்கு உள்ளே அனுமதி கிடையாது. தன்னுடைய அலுவகத்தில் பணியாளர்கள் அனைவரும் குறித்த நேரத்திற்கு வந்துவிட்டார்களா என்பதை அறிந்து கொள்ள வீட்டில் இருந்தே ரேண்டமாக அலுவலகத்திற்கு போன் செய்வது வழக்கம். அப்போது ரிசீவரை எடுக்கும் நபர் ஹெலோவுக்கு பதிலாக தன்னுடைய பெயரை கூற வேண்டும். அந்த 15 நிமிடத்துக்கு யாரும் எங்கேயும் செல்ல மாட்டார்கள். தனி ஒரு சுதந்திர அரசியலமைப்பு அதிகாரியாக இந்தியாவில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்பதை தெளிவாக உணர்த்தியவர் சேஷன். அவருடைய மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவாகும்.

(As told to Ritika Chopra; S K Mendiratta served with EC for more than 53 years and retired as its legal advisor)

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tn seshan passes away ecs stature during his term was miraculous

Next Story
கொங்கு எக்ஸ்பிரஸ் விபத்து: ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் மோதல்MMTS Train Accident Hyderabad, Kacheguda Train Accident Today kongu express, கொங்கு எக்ஸ்பிரஸ், ரயில் விபத்து, காச்சிகுடா
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com