அரசிடம் இருந்து உரங்களை வாங்க விவசாயிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் !

. மத்திய அரசு 2020-21 ஆண்டுக்கான உர மானியத்திற்கு ரூ. 71, 309 கோடி நிதி ஒதுக்கியது.

Harish Damodaran

Harish Damodaran

To check diversion, Centre plans limit on purchase of fertilizers by farmers :  பருவ காலங்களில் மானிய விலையில் வாங்கப்படும் உரங்களுக்கு வரம்புகளை விதிக்க மத்திய அரசு முயன்று வருகிறது. நிறுவனங்களுக்கு உரமானியம் வழங்கப்படுவதை போன்று இதுவும் செயல்பட உள்ளது. 2018ம் ஆண்டில் இருந்து விவசாயிகளுக்கு விற்கப்படும் உண்மையான விற்பனை அடிப்படையில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, விற்பனை பாய்ண்ட் ஆஃப் சேல்ஸ் மெஷினில் பதிவு செய்யப்படுகிறது.

தற்போது விவசாயிகள் உரங்களை வாங்கிய பிறகே நிறுவனங்களுக்கு பணம் அளிக்கப்படுகிறது. இதற்கு முன்பு, தொழிற்சாலை அல்லது துறைமுகங்களில் இருந்து செல்லும் சாக்குகள் மாவட்டத்தின் ரயில் நிலையத்தில் அல்லது அங்கீகரிக்கப்பட்ட கொடவுன்களுக்கு செல்வதற்கு முன்பே பணம் கிடைத்துவிடும். நரேந்திர மோடி அரசாங்கம் மானிய விலையில் பெறப்படும் உரம் “மொத்த திசைதிருப்பலை” கணிசமாகக் கட்டுப்படுத்தியுள்ளது என்று நம்புகிறது.

முன்பாக உரம் அனுப்பப்பட்ட இடத்தில் இருந்து விநியோகம் நடைபெறும் இடம் வரையில் சிறிய அளவிலான திருட்டுகளுக்கு வாய்ய்ப்பு இருந்தது. ஆனால் தற்போது இது போன்ற நிகழ்வு வெறும் 2.30 லட்சம் சில்லறை விற்பனை நிலையங்களில் மட்டுமே நிகழ்கிறது. அங்கு பிஓஎஸ் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன, மேலும் மானிய தொகையை பெறுவதற்கு, ஒவ்வொரு பரிவர்த்தனையும் இந்த சாதனங்களில் சேமிக்கப்பட்டு, அதற்கான தகுதியை பெற வேண்டும்.

எங்கள் அடுத்த இலக்கு உண்மையான விவசாயிகளுக்கு மட்டுமே மானிய உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் சில்லறை திசைதிருப்பலை அகற்றுவதாகும், ”என்று ஒரு உயர்ந்த அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

to read this article in English

தற்போது, அரசு மறுப்பற்ற கொள்கைகளை பின்பற்றி வருகிறது. விவசாயிகள் அல்லாதோரும் தற்போது உரங்களை பாய்ண்ட் ஆஃப் சேலில் பெற்றுக் கொள்ளலாம். அவர்கள் தங்களின் ஆதார் அடையாள அட்டை எண்ணை மட்டும் பகிர வேண்டும். அவர்கள் வாங்கிய அளவு, அவர்களின் பெயர், மற்றும் பயோமெட்ரிக் அடையாளம் ஆகியவை பி.ஒ.எஸ் டிவைஸில் பதிவு செய்யப்பட்டிருக்கும். உரத்துறையில் உள்ள இ-உர்வரக் என்ற இணையதளத்தில் இவை இணைக்கப்பட்டுள்ளது.

“ஒரே நேரத்தில் 100 க்கும் மேற்பட்ட சாக்குகளில் அனைத்து உரங்களையும் வாங்க முடியாது என்று ஒரு கட்டுப்பாடு உள்ளது. இந்த வரம்பு ஆகஸ்ட் 11 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முன்பு இது 200 சாக்குகள் என்ற வரம்பில் இருந்தது. ஆனால் ஒரு பருவத்தில் எத்தனை முறை ஒருவர் வாங்க வேண்டும் என்பதில் எந்தவிதமான தடைகளும் இல்லை, அது கரீஃப் அல்லது ரபியாக இருந்தாலும் சரி, ”என்று அதிகாரி விளக்கினார்.

ஈ-உர்வாரக் இயங்குதளம் ஒரு தரவுத்தளத்தை உருவாக்க உதவியது, இது தகுதியற்ற பயனாளிகளை களையெடுக்க வழிவகுக்கிறது. அவர்கள் நியாயப்படுத்தப்பட்ட அளவை காட்டிலும் அதிகம் பெற்றுக் கொண்டிருந்தனர். உதாரணத்திற்கு ஒரு நெல் அல்லது கோதுமை விவசாயி ஒரு ஏக்கருக்கு 3 சாக்கு யூரியா, ஒரு சாக்கு டை அம்மோனியம் பாஸ்பேட் மற்றும் அரை சாக்கு முரியேட் பொட்டாசியம் ஆகியவை தேவைப்படும். 100 மூட்டைகள் என்றால் கணிசமாக 20 ஏக்கருக்கு விவசாயி இந்த உரங்களை பயன்படுத்த முடியும்.

“ஒரு முறை வாங்குவதற்கான வரம்பை சுமார் 50 மூட்டைகளாக குறைக்க நாங்கள் யோசித்து வருகிறோம், மேலும் ஒரு முழு பருவத்தில் ஒரு நபருக்கு தர வேண்டிய உரமூட்டைகளின் எண்ணிக்கையையும் குறைக்க முடிவு செய்துள்ளோம். மேலும் விரும்புவோர் மானியமில்லாத எம்ஆர்பியில் (அதிகபட்ச சில்லறை விலை) வாங்கலாம், ”என்று அந்த அதிகாரி கூறினார்.

புதிய முறையின் கீழ், சில்லறை விற்பனையாளரின் பிஓஎஸ் இயந்திரம் மூலம் விவசாயிகளுக்கு விற்கப்படும் மொத்த உரங்களின் மானியம் வாரந்தோறும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு மாற்றப்படுகிறது. வரம்பு ஏற்பட்டால், இயந்திரம் / இயங்குதளம் கூடுதல் மூட்டைகளை பதிவு செய்வதை நிறுத்திவிடும், அவை மானியமில்லாத எம்ஆர்பிக்களில் சில்லறை விற்பனை செய்யப்பட வேண்டும். இதற்கிடையில், 22 பெரிய உரங்களை பயன்படுத்தும் மாநிலங்களில், மாவட்டம் தோறும் அதிக அளவு யூரியா வாங்கும் 20 நபர்களை அடையாளம் காணும் பயிற்சியை மோடி அரசு ஏற்கனவே துவங்கியுள்ளது.

ஏப்ரல்-ஜூலை காலத்தில் காரீப் பருவத்தில், இ-உர்வாரக் தரவுத்தளம் இப்படியாக 13,054 உரம் வாங்கும் நபர்களை அடையாளம் கண்டுள்ளது. 12,866 நபர்களின் பர்ச்சேஸ் எண்ணிக்கை, எத்தனை முறை வாங்குகிறார்கள் போன்ற விவரங்கள் மாவட்ட அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டன. இந்த தரவுகளின் அடிப்படையில், 5,107 உர விற்பனையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது, 1,262 சில்லறை விற்பனையாளர்களின் உரிமங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டன / ரத்து செய்யப்பட்டன மற்றும் 227 எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது நாங்கள் சில்லறை விற்பனையாளர்களை கணக்கில் கொள்கிறோம். விவசாயிகளை அல்ல. உர(கட்டுப்பாட்டு) ஆணை 1985ன், அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ், உண்மையான விவசாயிகளுக்கு உரங்களை வழங்காமல், அதிகமாக வாங்கும் நபர்களுக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய எங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.

இந்த மாற்றம் நல்ல முடிவுகளை ஏற்படுத்தியதாகவே தெரிகிறது. சில்லறை வணிகத்தில் விற்பனை, ஆண்டுக்கு ஆண்டு நவம்பர் முதல் ஜூலை வரை இரட்டை இலக்கங்களில் விற்பனை அதிகரிக்கும். ஆனால் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து அவை எதிர்மறையாக வளர துவங்கியுள்ளது. விற்பனையாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மற்றும் ஒரு முறை 100 பைகள் மட்டுமே வாங்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகள் முக்கிய பங்காற்றியுள்ளது. மத்திய அரசு 2020-21 ஆண்டுக்கான உர மானியத்திற்கு ரூ. 71, 309 கோடி நிதி ஒதுக்கியது. கடந்த நிதியாண்டின் இறுதியில் தொழில் நிறுவனங்களால் மதிப்பிடப்பட்ட ரூ .48,000 கோடி செலுத்தப்படாத நிலுவைத் தொகை இதில் சேர்க்கப்படவில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: To check diversion centre plans limit on purchase of fertilisers by farmers

Next Story
பீகார் தேர்தல்: பிரதமர் மோடிக்காக 8 பொதுக்கூட்டங்கள் 4 லட்சம் ஸ்மார்ட்போன் தொண்டர்கள்Bihar election, Bihar elections, Bihar assembly polls, பீகார் தேர்தல், பிரதமர் மோடிக்காக 8 காணொலி பொதுக்கூட்டங்கள், 4 லட்சம் ஸ்மார்ட் போன் தொண்டர்கள், 10000 சமூக ஊடக போராளிகள், பாஜக, பாஜக திட்டம், Modi rally bihar elections, Covid rules Bihar election, Bihar election news, Bihar election coronavirus, bihar news, tamil indian express
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com