65வது தேசிய திரைப்பட விருது : சிறந்த தமிழ்த் திரைப்படம் “To Let"; ஏ.ஆர்.ரகுமான், ஸ்ரீதேவிக்கும் விருது

தில்லியில் இந்த ஆண்டிற்கான 65வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலையும் அதன் விவரங்களும் இன்று அறிவிக்கப்பட்டது. 2018ம் தேசிய விருதுகளின் பட்டியல் விவரங்களை காணலாம்:

– சிறந்தத் திரைப்படம் – டூ லெட் (To Let)

டூ லெட் திரைப்படத்தைப் ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் உண்மை சம்பவங்களை தொகுத்து எடுக்கப்பட்ட படமாகும். இதில் ஒரு சிறிய குடும்ப, இரு சக்கர வாகனத்தில் வாடகை வீடு தேடி அலைகிறது. தற்போது வசிக்கும் இல்லத்தில் வீட்டின் உரிமையாளர் வாடகையை உயர்த்திய நிலையில் மற்றொரு வாடகை வீடு கண்டுபிடித்து மாற 30 நாட்களே உள்ளன. இறுதியில் இந்த சிறிய குடும்பம் தங்களுக்கான வசிப்பிடத்தை கண்டுப்பிடிப்பார்களா என்பதே கதையின் முடிவு.

சமூக உண்மைகளை எடுத்துரைக்கும் இத்திரைப்படம், திரையரங்குகளில் வெளிவராத நிலையிலும், ‘சிறந்த தமிழ்த் திரைப்பட’ விருதை தட்டிச் சென்றுள்ளது. இப்படத்தைப் பற்றி அறியாதவர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது இந்த விருது.

– சிறந்த இசையமைப்பாளர் விருது – ஏ.ஆர்.ரகுமான்

சிறந்த இசையமைப்பாளாருக்கான விருதை ஏ.ஆர். ரகுமான் 5 வது முறையாக பெறுகிறார். இம்முறை “காற்று வெளியிடை” திரைப்படத்திற்காகவும் மற்றும் ஸ்ரீதேவி நடித்த “மாம்” திரைப்படத்தின் பின்னணி இசைக்காகவும் பெற்றுள்ளார்.

– சிறந்த தமிழ்ப் பாடகி – சாஷா

காற்று வெளியிடை படத்தில் இடம்பெறும் வான் வருவான் பாடலுக்காக சாஷா விருது பெற்றுள்ளார். வைரமுத்துவின் வரிகளில், ரகுமான் இசையில் அனைவரின் மனதையும் கொள்ளைக்கொண்ட இப்பாடலுக்கான சிறந்த பாடகி விருதை இவருக்கு அறிவித்துள்ளனர்.

– பாகுபலிக்கு 2 தேசிய விருதுகள் – சிறந்த சண்டைக்காட்சி, சிறந்த வரைக்கலைக்கான விருது

உலக அளவில் மாபெரும் வெற்றியடைந்த பாகுபலி 2 திரைப்படத்திற்கு 2 விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. ராஜமௌலி இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு சிறந்த சண்டைக்காட்சி மற்றும் சிறந்த வரைக்கலைக்கான விருது.

– ஸ்ரீதேவி விருது – மாம் படத்திற்காக சிறந்த நடிகை விருது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான “மாம்” திரைப்படத்தில் இவர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

– சிறந்த மலையாள திரைப்படம் – தொண்டி முதலும் திரிக்‌ஷ்யம்

இந்த ஆண்டிற்கான சிறந்த மலையாள திரைப்படம் விருதை “தொண்டிமுதலும் திரிக்‌சாஷியும்” என்றப் படம் பெற்றுள்ளது.

– சிறந்த நடிகைக்கான சிறப்பு விருது – பார்வதி மேனன்

சிறந்த நடிகைக்கான சிறப்பு விருதை “டேக் ஆஃப்” படத்திற்காக பார்வதி மேனன் பெற்றுள்ளார். இவருக்கு மலையாள திரையுலகம் மட்டுமின்றி தமிழகத்திலும் ரசிகர்கள் ஏராளம். இந்த விருது அறிவிப்பால் பார்வதியின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

– சிறைந்த மலையாள பின்னணி பாடகர் விருது – ஜே. யேசுதாஸ்

– சிறந்த ஹிந்தி திரைப்படம் – நியூட்டன்

_தாதா சாகோப் பால்கே விருது_ வினோத் கண்ணா

கன்னப் படம் – ஹெப்பட்டு ராமக்கா

சிறந்த துணை நடிகர் – ஃபஹத் பாசில்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

×Close
×Close