வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்

குறித்த நேரத்தில் கட்டாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்!

வருமான வரி தாக்கல் : 2017 – 18 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய ஜூலை 31ல் இருந்து ஆகஸ்ட் 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது.

தொழில் முனைவோர்கள், அசையா சொத்துகளில் இருந்தும், மூலதன மதிப்புகளில் இருந்தும் வருமானம் பெருவோர்களும் இன்றைக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்,

வருமான வரி கணக்கை இன்று முடிக்காதவர்கள் அபராதம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.  தமிழகத்தில் வருமான வரித் தாக்கல் செய்வோர்களின் எண்ணிக்கை 71%மாக அதிகரித்துள்ளது.

கேரளாவில் மழை வெள்ளம் ஏற்பட்ட காரணத்தால், வருமான வரி தாக்கல் செய்ய அவர்களுக்கு செப்டம்பர் 15ம் தேதி வரை கால அவகாசம் அளித்திருக்கிறது வருமான வரித்துறை.

அதிக வருமான வரி கட்டும் மாநிலங்களில் மகாராஷ்ட்ரா, குஜராத், உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு அடுத்து பட்டியலில் தமிழகமும் இணைந்துள்ளது.

வருமான வரி தாக்கல் – அபராதம்

ரூ. 5 லட்சத்திற்கும் மேல் வருமான வரி உள்ளவர்கள் வரும் டிசம்பர் 31க்குள் வருமான வரியை செலுத்தும் பட்சத்தில் 5000 ரூபாய் அபாரதம் கட்ட வேண்டும் என்றும் அடுத்த மார்ச் (2019) 31க்குள் செலுத்த முற்பட்டால் ரூ. 10,000 அபராதமாக கட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close