சென்னை பெட்ரோல் டீசல் விலை நிலவரம் : சென்னையில் தொடர்ந்து ஆறாவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைந்துள்ளது. சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய்யின் விலையில் தொடர் மாற்றம் ஏற்பட்டு வருவதால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டு வந்தன. சமீபத்தில் மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 90 ரூபாய்க்கும் மேல் அதிகமாக விற்கப்பட்டது. இதனால் பொது மக்கள் அதிக அளவில் வேதனையுற்றனர்.
பெட்ரோல் விலையை விஞ்சிய டீசலின் விலை
கடந்த ஒரு வாரமாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆனால் ஒடிசா மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையை முந்தி அடித்துக் கொண்டு டீசலில் விலை உயர்ந்திருக்கிறது.
எப்போதுமே பெட்ரோலின் விலையை விட டீசலின் விலை தான் மிகவும் குறைவாக இருக்கும். நேற்றைய நிலவரப்படி ஒடிசாவில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80.57-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், ஒரு லிட்டர் டீசலின் விலை பெட்ரோல் விலையைவிட 12 காசுகள் அதிகமாகி, அதாவது ரூ.80.69-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலைப் பற்றி தெரிந்து கொள்ள
சென்னை பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 11 காசு குறைந்து ரூ.84.53க்கு விற்பனையாகிறது. இதேபோன்று டீசல் விலை 7 காசு குறைந்து ரூ.79.15க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 6 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.1.57 மற்றும் டீசல் விலை 89 காசு குறைந்து விற்பனையாகிறது.