Eight killed as heavy rains lash Hyderabad :வங்கக் கடலில் உருவாகி இருக்கும் காற்று அழுத்த மண்டலத்தின் காரணமாக ஐதராபாத் நகர் முழுவதும் கடும் மழை பெய்து வருகிறது. தற்போது அந்த அழுத்த மண்டலம் ஆந்திராவில் இந்து தெலுங்கானா நோக்கி பயணிக்க துவங்கியுள்ளது. இது மேலும் மகாராஷ்ட்ரா மற்றும் கர்நாடகா நோக்கி மிக கனமழையில் இருந்து கனமழையாக பயணிக்கும் என்று தெரிய வந்துள்ளது.
செவ்வாய் கிழமை மாலையில் இருந்து இடைவிடாது பெய்து வரும் மழையால் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது ஐதராபாத். ஐதராபாத் மாநகராட்சி, மாநில மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீர் நிலைகள் முழுமையான கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் வீடுகளுக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. வாகனங்கள் பல அடித்து செல்லப்பட்டிருப்பதால் அங்கு நிலைமை மோசமடைந்து வருகிறது.
பந்தலகுடா பகுதியில் பாறை வந்து விழுந்ததில் 19 நாள் கைக்குழந்தை உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர். வெள்ள நிலைமையை பரிசீலனையிட்ட முதன்மை செயலாளர் ஸ்ரீ சோமேஷ் குமார் ஐதராபாத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்தார். ஐதராபாத்தில் ஒரே நாளில் 191.8 மி.மீ கனமழை கொட்டி தீர்த்துள்ளது. 1903ம் ஆண்டுக்கு பிறகு இப்போது தான் இது போன்ற கனமழையை சந்தித்துள்ளது ஐதரபாத் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil