அந்த பெண் (ரஞ்சன் கோகாய் மீது வழக்கு பதிந்த பெண்) மீது வழக்கு போடாதே என்று என் மகனிடம் கூறினேன் : ஹரியானா பெண்மணி

உள்ளூரில் இருக்கும் காவல் நிலையத்தில் நவீன் குமார் மீது எந்தவிதமான வழக்குகளும் இல்லையென்றும், அவரும் யார் மீதும் வழக்குகள் பதிவு செய்யவில்லை என்றும் கூறியுள்ளனர்

உள்ளூரில் இருக்கும் காவல் நிலையத்தில் நவீன் குமார் மீது எந்தவிதமான வழக்குகளும் இல்லையென்றும், அவரும் யார் மீதும் வழக்குகள் பதிவு செய்யவில்லை என்றும் கூறியுள்ளனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அந்த பெண் (ரஞ்சன் கோகாய் மீது வழக்கு பதிந்த  பெண்) மீது வழக்கு போடாதே என்று என் மகனிடம் கூறினேன் : ஹரியானா பெண்மணி

Anand Mohan J

CJI complainant : அந்த பெண்ணிற்கு எதிராக புகார் அளிக்காதே என்று எச்சரிக்கை செய்தேன் என தலைமை நீதிபதிக்கு எதிராக புகார் அளித்த பெண்ணிற்கு எதிராக புகார் அளித்த ஹரியானா நபரின் அம்மா கூறியுள்ளார்.

Advertisment

ரஞ்சன் கோகாய்க்கு எதிராக புகார் அளித்திருக்கும் பெண்ணிற்கு எதிராக மோசடி வழக்கு ஒன்றை பதிவு செய்திருக்கிறார் நவீன் குமார் என்பவர். செக்யூரிட்டி கார்டாக வேலைப்பார்க்கும் அவருக்கு நீதிமன்றத்திற்குள் வேலை வாங்கித் தருவதாக கூறி 50,000 ரூபாய் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக அந்த பெண்ணின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் அளித்த பெண்ணின் மீது அளிக்கப்பட்ட புகார்

ஆனால் இதனை, தலைமை நீதிபதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தனுக்கு எதிராக பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார். நவீன் குமார் அந்த பெண் மீது மார்ச் 3ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஏப்ரல் 20ம் தேதி அந்த பெண்ணிற்கு பெயில் தரக்கூடாது என்று டெல்லி போலிசார் பட்டியாலா நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்ட நிலையில் நாளை இதன் விசாரணை வருகிறது.

Advertisment
Advertisements

குற்றம் சுமத்திய நவீன்  வீட்டில் உள்ள அவருடைய அம்மா மீனாவிடம் இது குறித்து பேசினோம். ஏப்ரல் 20ம் தேதி அவர் சண்டிகர் சென்றுவிட்டதாகவும், அப்போதிருந்து அவருடைய செல்போன் ஸ்விட்ச் ஆஃபில் இருப்பதாகவும் அவருடைய அம்மா தெரிவித்தார். நான் நவீனிடம் கூறினேன் “அந்த பெண்ணுக்கு எதிராக வழக்கு ஏதும் போட வேண்டாம் என்று. பவர்புல்லான மனிதர்களுக்கு எதிராக போராடுவது அவ்வளவு நல்லதல்ல” என்றேன். எல்லாம் சரி ஆகிவிடும் என்று அவன் வீட்டை விட்டு செல்லும் முன்பு கூறினான் என்றும் மீனா கூறினார்.

Compalaint against CJI complainant

எச்.எல். சிட்டி பிரைவேட் லிமிடட் என்ற நிறுவனத்தில் பாதுகாப்பு காவலராக மாத சம்பளம் 15 ஆயிரத்திற்கு வேலைக்கு செல்கிறார் நவீன் குமார். இந்த விவகாரம் பெரிதான பின்பு, நவீனுக்கு உரிய பாதுகாப்புகள் அளிக்கக் கோரி ஜாஜ்ஜர் எஸ்.பிக்கு டெல்லி போலீஸ் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க : கடும் அச்சுறுத்தலுக்கு இடையில் நீதித்துறை சுதந்திரம்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

டெல்லி குற்றவியல் போலீசாரிடம் எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளது என்று கூறியுள்ளார். உள்ளூரில் இருக்கும் காவல் நிலையத்தில் நவீன் குமார் மீது எந்தவிதமான வழக்குகளும் இல்லையென்றும், அவரும் யார் மீதும் வழக்குகள் பதிவு செய்யவில்லை என்றும் கூறியுள்ளனர். ஜாஜ்ஜர் எஸ்.எஸ்.பி கூறுகையில், தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும், அவரிடம் ரைஃபில் வைத்துக் கொள்ள உரிமம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

எம்.டி.எச் பள்ளியில் +2 முடித்துள்ளார் நவீன். அவருடைய தந்தை ம.பி.யில் டாக்ஸி ஓட்டுநராக பணியாற்றுகிறார். அவருடைய தாய் வீட்டில் டெய்லர் ஷாப் வைத்து நடத்துகிறார்.

மூன்று மாதங்கள் கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்துவிட்டு பின்னர் ஒரு சிம் கார்ட் கடையில் மூன்று வருடங்களாக 1500 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு வேறொரு இடத்தில் வேலை பார்க்கத் துவங்கினான். ஒரு பெண்ணை மணம் முடித்து தற்போது அவர்களுக்கு 3 வயதில் குழந்தை உள்ளது என்று அவருடைய தாய் கூறுகிறார்.

நவீன் குமாரின் அலுவலகத்தில் விசாரித்த போது, சண்டிகருக்கு முக்கியமான ஆவணங்கள் எடுத்துச் செல்லும் போது பாதுகாப்பிற்கு அவர் அனுப்பி வைக்கப்படுவார். அவர் மீதான க்ரிமினல் வழக்குகள் ஏதாவது இருக்கின்றதா என சோதனை செய்தோம். இது இந்த நிறுவனத்தின் வழக்கம் என்றனர்.

CJI complainant நவீனின் தாயார் மீனா

வேலை வாங்கித் தருவதாக கூறி 50 ஆயிரம் மோசடி

அவருடைய மனைவியிடம் பேசும் போது, அவருக்கு இந்த சம்பளம் போதவில்லை. சம்பள உயர்வு குறித்து எந்த நடவடிக்கையும் அவர்களின் அலுவலகத்தில் எடுக்கவில்லை. அதனால் அவர் வேறு வேலை தேடினார். ஒரு நாள் வந்து 15,000 ரூபாயை அவர் வீட்டில் இருந்து வாங்கி வந்தார். அவருடைய சேமிப்பு என அனைத்தையும் சேர்த்து ஒரு மாதத்திற்கு 50 ஆயிரம் ரூபாயை திரட்டினார்.

அவனுக்கு வேலை கிடைக்கவில்லை என்ற வருத்தம். காவல்துறையில் புகார் அளிப்பதற்கு பதிலாக அந்த 50 ஆயிரத்தை சம்பாதித்திருக்கலாம் என்றார் அவருடைய அம்மா.

ஜுன் மாதம் 2017ம் ஆண்டு மன்சா ராம் என்பவர் நவீன் குமார் மற்றும் அந்த பெண்ணிற்கு இடையே ஏஜெண்ட்டாக செயல்பட்டு அவர்களுக்கு ஒரு மீட்டிங்கை ஏற்பாடு செய்தார். பின்னர் மூன்று மாதங்கள் கழித்து நவீன் குமார், சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் இருக்கும் வங்கி ஒன்றில் இருவரையும் சந்திக்க வைத்தவர் அவர் என்று எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ராம் வீட்டில் விசாரிக்கும் போது இந்த விவகாரம் நடைபெற்று சரியாக 9 மாதத்தில் அவர் வீட்டு மொட்டைமாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து போனார். அலிகார் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற அவர் ஜாஜ்ஜர் நீதிமன்றத்தில் வேலை பார்த்து வந்தார். நிலம் மற்றும் கணவர்களால் கைவிடப்பட்ட மனைவிகளுக்காக வழக்காடி வந்தார்.

இந்த நாள் வரை, அவர் எப்படி மாடியில் இருந்து கீழே விழுந்தார் என்று எங்களுக்கு தெரியவில்லை. அவருக்கும் அது நினைவில் இல்லை. முதுகுத்தண்டில் பெரிய அளவில் அடிபட்டு, இடுப்பிற்கு கீழ் முழுவதும் செயல்படாமல் முடக்குவாதத்தால் அவதிப்பட்டார். டெல்லி எய்ம்ஸில் வைத்து மருத்துவ சிகிச்சை அளித்தும் பயனில்லை. ஜனவரி 25ம் தேதி அவர் உயிரிழந்தார் என்கிறார் அவருடைய மனைவி சுனிதா.

க்ரூப் டி பதவி 10 லட்ச ரூபாய்க்கு பேசப்பட்டு, அதில் 50 ஆயிரம் ரூபாய் மட்டும், அட்வான்ஸாக பெறப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களின் குடும்பத்தினர் யாருக்கும் எந்தவிதமான தகவல்களும் தெரியாது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். 2015ல் வாங்கிய புதுவீடு, மற்றும் 2017ல் நடந்த அவரின் முதல் பெண்ணின் திருமணத்தால் ஏற்பட்ட கடனை அடைக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

என்னுடைய மகனோ இன்னும் படித்துக் கொண்டிருக்கின்றான். அதனால் வருமானம் இல்லை. இளைய மகளையும் திருமணம் செய்து தர வேண்டும் என்று புலம்பியவாறே பேசும் ராமின் மனைவி சுனிதா, அவருடைய கணவர் உச்ச நீதிமன்றத்தில் பிறருக்கு வேலை வாங்கித் தருவதாக கூறிய குற்றச்சாட்டினை மறுத்துவிட்டார்.

ஆனால் அந்த பெண்ணின் வழக்கறிஞரோ, இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. குற்றம் சுமத்தியவரையோ, இடைத்தரகராக செயல்பட்டவரையோ என் தரப்பு மனுதாரர் பார்க்கவில்லை என்றும், அவர் யாருக்கும் மிரட்டல் விடவில்லை என்றும் உறுதியாக கூறுகிறார்.

இது தொடர்பான முழுமையான கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க :

Cij

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: