சமீபத்தில் தக்காளி விலை உயர்ந்துள்ள நிலையில், வாரணாசியில் சமாஜ்வாடி கட்சி தொண்டர் ஒருவர் தக்காளியை பாதுகாக்க பவுன்சர்களை நியமித்தார்.
வாரணாசியின் லங்கா பகுதியில் மளிகை வியாபாரம் செய்யும் அஜய் ஃபௌஜி, தக்காளி விலையை பற்றி பேரம் பேசுகையில் அசம்பாவிதங்களை தடுக்கும்வகையில் இரண்டு பவுன்சர்களைப் பணியமர்த்தியுள்ளார்.
முன்னதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் பிறந்தநாளில் வாரணாசியில் தக்காளி வடிவ கேக்கை ஃபாஜி வெட்டியிருந்தார்.
இது குறித்து அவர் பேசுகையில், “தக்காளி விலை குறித்து மக்கள் மத்தியில் வாதங்களை நான் கேட்டுக்கொண்டே இருந்தேன்.
எனது கடையில் இருந்தவர்களும் பேரம் பேச முயன்றனர். எனவே தொடர்ச்சியான வாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, எனது வண்டியில் சீருடையில் பவுன்சர்களை நிறுத்த முடிவு செய்தேன்” என்றார்.
இந்த வாரம் வட இந்தியா முழுவதும் தக்காளி விலை உயர்ந்தது, பாரம்பரிய இந்திய உணவு வகைகளின் மொத்த விலை ஒரு மாதத்தில் 288 சதவீதம் உயர்ந்து கிலோவுக்கு ரூ.140 ஆக உயர்ந்துள்ளது. சில்லறை விலைகள் இன்னும் அதிகமாக உயர்ந்ததால், பலர் நுகர்வு குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மேலும் ஃபௌஜி, தக்காளியை வாடிக்கையாளர்கள் 100, 150 என வாங்குகின்றனர் கிலோ ரூ.160 வரை விற்பனை ஆகிறது. இதனால் யாரும் ஒரு கிலோ என வாங்கிச் செல்வதில்லை” என்றார்.
பெருநகரங்களில், சில்லறை தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு ரூ.58-148 என்ற அளவில் இருந்தது, கொல்கத்தாவில் அதிகபட்சமாக கிலோ ரூ.148 ஆகவும், மும்பையில் குறைந்தபட்சமாக ரூ.58 ஆகவும் இருந்தது. சென்னையிலும் தக்காளியின் மொத்த விலை கடந்த வாரம் கிலோ ரூ.40-ல் இருந்து இருமடங்காக அதிகரித்து தற்போது ரூ.80-90 ஆக உயர்ந்துள்ளது.
இந்த வார தொடக்கத்தில் மெக்டோனால்டு நிறுவனத்திலும் இந்தத் தக்காளி பிரச்னை காணப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“