இந்தியாவிலேயே சுத்தமான ரயில் நிலையம் இதுதான் : சிங்கார சென்னைக்கு வந்த சோதனையை பாருங்க..
Chennai railway stations : இந்தியாவின் அசுத்தமான முதல் 10 ரயில்வே ஸ்டேசன்களில் 6 ஸ்டேசன்கள் சிங்கார சென்னையிலேயே இருக்கும் தகவல், சென்னைவாசிகளை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தமிழக மக்களையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்தியாவின் அசுத்தமான முதல் 10 ரயில்வே ஸ்டேசன்களில் 6 ஸ்டேசன்கள் சிங்கார சென்னையிலேயே இருக்கும் தகவல், சென்னைவாசிகளை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தமிழக மக்களையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
Advertisment
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், 2016ம் ஆண்டுமுதல் நாட்டில் உள்ள அனைத்து ரயில்வே ஸ்டேசன்களிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தரம் பராமரிக்கப்பட்டு வரப்பட்டன. இந்நிலையில், இந்திய ரயில்வே, தனியார் தொண்டு நிறுவன அமைப்புடன் இணைந்து நாட்டிலுள்ள 720 ரயில்வே ஸ்டேசன்களில் ஆய்வு மேற்கொண்டு, தூய்மையான ரயில்வே ஸ்டேசன்கள் மற்றும் அசுத்தமான ரயில்வே ஸ்டேசன்களில் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் அதிர்ச்சி என்னவென்றால், தூய்மையான ரயில்வே ஸ்டேசன்களின் டாப் 10 பட்டியலில், தமிழகத்தில் இருந்து ஒரு ரயில்வே ஸ்டேசனும் இடம்பெறவில்லை.
அசுத்தமான ரயில்வே ஸ்டேசன்களின் டாப் 10 பட்டியலில், 6 இடங்களை, தமிழகத்தில் அதுவும் குறிப்பாக சென்னையில் உள்ள 6 ஸ்டேசன்களே இடம்பெற்றுள்ளது வருத்தத்திற்கு உரியதே....
தூய்மையான ரயில்வே ஸ்டேசன்களில் டாப் 10 பட்டியல்
1. ஜெய்ப்பூர் ( ராஜஸ்தான்)
2. ஜோத்பூர் ( ராஜஸ்தான்)
3. துர்காபுரா (ராஜஸ்தான்)
4. தவாய் (ஜம்மு)
5. காந்திநகர் - ஜேபி (ராஜஸ்தான்)
6. சூரத்கர் (ராஜஸ்தான்)
7. விஜயவாடா ( ஆந்திரா)
8. உதய்பூர் சிட்டி ( ராஜஸ்தான்)
9. அஜ்மீர் (ராஜஸ்தான்)
10. ஹரித்வார் (உத்தர்காண்ட்)
மிகவும் அசுத்தமான ரயில்வே ஸ்டேசன்களில் டாப் 10 பட்டியல்