போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் மனுவை புதன்கிழமைக்கு ஒத்திவைத்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்யன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும், இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரலுமான முகுல் ரோஹத்கி, அவரிடம் இருந்து போதைப்பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும், அவர் போதைப்பொருள் உட்கொண்டதாக மருத்துவப் பரிசோதனை எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் வாதிட்டார்.
போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (NCB) ஆர்யனின் ஜாமீன் மனுவை எதிர்த்தது. மேலும், 23 வயதான ஆர்யன் போதைப்பொருள் பயன்படுத்துபவர் மட்டுமல்ல, சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலிலும் ஈடுபட்டார் என்றும் குற்றம் சாட்டியது.
மாஜிஸ்திரேட் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றங்கள் இரண்டும் ஆர்யனின் மனுவை நிராகரித்ததால், ஆர்யன் மும்பை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி இருந்தார்.
ஆர்யன் கான் ஜாமீன் விசாரணையின் முக்கிய அம்சங்கள் இங்கே:
ஆர்யன் ஒரு செல்வாக்கு மிக்க நபர் என்றும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் ஆதாரங்களை சிதைக்க அல்லது நீதியிலிருந்து தப்பிச் செல்ல வாய்ப்புள்ளதாகவும் NCB கூறியது. சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பின் ஒரு பகுதியாக இருந்த வெளிநாட்டில் உள்ள நபர்களுடன் ஆர்யன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் NCB தெரிவித்தது.
விசாரணையின் போது சேகரிக்கப்பட்ட தகவல்கள் முதன்மையாக அர்பாஸ் மெர்ச்சண்டிடம் இருந்து சட்டவிரோதமாக கொள்முதல் செய்தல் மற்றும் விநியோகம் செய்ததில், ஆர்யன் பங்கு வகித்தது தெரியவந்தது என்று NCB கூறியது.
ஆர்யன் கானும், ஷாருக்கானின் மேலாளரான பூஜா தத்லானி என்ற பெண்ணும், விசாரணையைத் தடம் புரள செய்யும் முயற்சியில் வழக்கின் ஆதாரங்களையும் சாட்சிகளையும் சிதைப்பதாகவும் NCB கூறியது.
ஆர்யன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, “விண்ணப்பதாரர் 23 வயதுடையவர், முன்பு அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் இருந்தார். மும்பையில் இருந்து கோவாவிற்கு ஒரு கப்பல் பயணத்திற்கு, அவரை பிரதீக் காபா ஒரு விருந்தினராக அழைத்தார். ஆர்யனிடம் இருந்து போதைப்பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை மற்றும் அவர் அதனை வைத்திருக்கவும் இல்லை. ஆர்யனை கைது செய்ய எந்த சந்தர்ப்பமும் இல்லை.
மேலும், “வாடிக்கையாளர்களைப் பிடிக்க NCB அதிகாரிகளை அனுப்பியது. ஆர்யன் மற்றும் அர்பாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அர்பாஸின் காலணிகளில் இருந்து 6 கிராம் சரஸ் மீட்கப்பட்டதாக NCB கூறுகிறது, ஆனால் அவர் அதை மறுக்கிறார். நுகர்வு இருப்பதைக் காட்ட ஆர்யன் கானுக்கு மருத்துவ பரிசோதனை எதுவும் செய்யப்படவில்லை என ரோஹத்கி கூறினார்.
சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு ஆர்யன் நிதியுதவி செய்தார் என்பதைக் காட்ட எந்த ஆதாரமும் இல்லை என்றும் ரோஹத்கி கூறினார். “சதி வழக்கு எதுவும் இல்லை, எந்தத் தூண்டுதலும் இல்லை, நான் எந்த எஜமானர்-வேலைக்காரன் உறவிலும் இல்லை. நீதிமன்றத்தின் முன் உள்ள அனைத்து உண்மைகளின் நிலையும் இதுதான். நான் போதைப்பொருள் நுகர்வு அல்லது பயன்பாட்டை ஒப்புக்கொள்ளவில்லை. இவர்கள் இளம் பையன்கள். 6 கிராம் என்பதை ‘அறிந்தே வைத்திருந்ததாக” (உணர்வுபூர்வமான உடைமை) நீங்கள் ஒப்புக்கொண்டாலும், கடுமையான குற்றவாளிகளைக் காட்டிலும், முன்னோடிகள் இல்லாத சிறுவயதினரை பாதிக்கப்பட்டவர்கள் என்ற யோசனையை என்டிபிஎஸ் சட்டம் வழங்குகிறது,” என்று அவர் வாதிட்டார்.
முன்னதாக, ஆர்யனின் வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்றத்தில் கூடுதல் குறிப்பை சமர்ப்பித்தனர், NCB இன் மண்டல இயக்குனர் சமீர் வான்கடே மற்றும் சில அரசியல் பிரமுகர்களுக்கு இடையே பரப்பப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர் குற்றச்சாட்டுகளுடன் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறினர். “என்சிபியின் மண்டல இயக்குநர் தனது வாக்குமூலத்தில், ஒரு அரசியல் பிரமுகரின் (நவாப் மாலிக்) மருமகன் கைது செய்யப்பட்ட பகையின் காரணமாக இந்த குற்றச்சாட்டு என்று கூறினார். இன்று சொல்லப்படுவது என்னுள் மீண்டும் எழும்பியிருக்கிறது. தயவுசெய்து அந்த சர்ச்சையில் இருந்து என்னை விலக்கி வைக்கவும். ஆர்யன் கானுக்கு எந்தக் குறையும் இல்லை” என்று நீதிமன்றத்தில் ரோஹ்தகி கூறினார்.
ஃபோனில் இருந்து மீட்கப்பட்ட வாட்ஸ்அப் சாட்கள் எதுவும் க்ரூஸ் பார்ட்டியுடன் தொடர்புடையதாக இல்லை என்றும் ரோஹ்தகி வாதிட்டார். “என்னைப் பொறுத்தவரை நுகர்வோ அல்லது உடைமையோ (வைத்திருந்ததோ) இல்லை, உணர்வுபூர்வமான உடைமையாக இருந்தாலும், தண்டனை ஓராண்டுதான். ஆர்யன் மீது NDPS சட்டத்தின் பிரிவு 27A குற்றம் சாட்டப்படவில்லை, ஏனெனில் இது ஒரு சம்பவம் மட்டுமே. இருப்பினும், பிரிவு 29 இன் கீழ் அவர்கள் ஆர்யன் மீது சதி செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். இது பொதுவான, தெளிவற்ற சூழ்நிலை. அவர்களின் சதி குற்றச்சாட்டு பிரிவு 27A ஐ மறைப்பதாகும், அது செயல்படுத்தப்பட்டவுடன், NDPS சட்டத்தின் பிரிவு 37 இன் கீழ் ஜாமீன் வழங்குவதற்கான தடை தொடங்குகிறது. இந்த வழக்கில் கடந்தகாலத்தில் தண்டனை எதுவும் வழங்கப்பட்டதில்லை, ”என்று ரோஹ்தகி கூறினார்.
ரோஹத்கி தனது வழக்கை ஆதரிப்பதற்காக உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் கடந்தகால தீர்ப்புகளையும் மேற்கோள் காட்டினார். NDPS வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர்களுக்கான “சீர்திருத்தங்களுக்கான வாய்ப்பு” பற்றி இந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் பம்பாய் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அவர் மேற்கோள் காட்டினார். போதைப்பொருள் நுகர்வில் சீர்திருத்தம் குறித்து சமூக நீதி அமைச்சகத்தின் கருத்துக்களைக் குறிப்பிடும் இந்தியன் எக்ஸ்பிரஸின் ஒரு கட்டுரையையும் அவர் ஒப்படைத்தார்.
ஆன்லைனில் போக்கர் விளையாடும் இரண்டு நண்பர்களுக்கு இடையேயான அரட்டை போதைப்பொருள் எடுத்துக் கொண்டதை நிறுவ பயன்படுத்தப்படுவதாக மூத்த வழக்கறிஞர் அமித் தேசாய் கூறினார். “எந்த சதியும் இல்லை. போக்கர் விளையாடும் இரண்டு நண்பர்களுக்கு இடையே சலசலப்பு இருந்தது, அது 18 மாதங்களுக்கு முன்பு இருந்தது, அது இந்த வழக்குடன் இணைக்கப்படவில்லை… NCB “சதி என்ற குற்றச்சாட்டை” பயன்படுத்தி யாரையும் ஒவ்வொருவரையும் ஏமாற்றுகிறது.
தேசாய் மற்றொரு விண்ணப்பதாரருக்காக வாதங்களை முன்வைத்து, வாதிட இன்னும் அரை மணி நேரம் எடுத்துக் கொள்வதாகக் கூறியதையடுத்து, நேரமின்மை காரணமாக ஜாமீன் மனு மீதான விசாரணையை புதன்கிழமை பிற்பகலுக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil