Prabha Raghavan :
போதைப்பொருள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் இ-சிகரெட்டை இந்தியாவில் தடை செய்ய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இந்தியாவில் போதை பழகத்திற்கு அடிமையாக்கும் பழக்கம் நாளுக்குள் அதிகரித்துக் கொண்டே வருகிற்து. சில நாடுகளில் இ-சிகரெட் என்ற எலெக்ட்ரானிக் சிகரெட்களின் பயன்பாடுகள் புழகத்தில் இருந்து வருகிறது. இதை இந்தியாவில் பயன்படுத்தினால் விளைவு என்ன? இந்த இ சிகரெட்டினால் உடல் நல பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டா? என்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவின்பேரில் போதைப்பொருள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
இந்த ஆய்வின் முடிவில் இ-சிகரெட்கள் புகைப்பதால் உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிய வந்துள்ளது.போதைப்பொருள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியத்தின் ஆய்வு முடிவின் அடிப்படையில் , மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இந்தியாவில் இ-சிகரெட்டுகளை தயாரிப்பதை நிறுத்தி, இ-சிகரெட்டுகளை விற்கவும், இறக்குமதி செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு போதைப்பொருள் தொழில்நுட்ப ஆலோசனை வாரிய பரிந்துரை செய்துள்ளது.
சுகாதாரத்துறை மற்றும் போதை பொருள் தொழில்நுட்ப வாரியத்தின் இந்த விளக்கம் மூலம் சிஸ்டம்ஸ் (என்ட்ஸ்) தயாரித்தல், விற்பனை மற்றும் விநியோகம் ஆகியவற்றை தடை செய்ய முடியும். இது 2017 ஆம் ஆண்டில் $ 15.6 மில்லியனாக மதிப்பிடப்பட்டதாகக் கூறப்படுகின்றது, ஆனால் 2022 ஆம் ஆண்டு வரை ஒரு வருடத்திற்கு சுமார் 60 சதவீதத்தை இது வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுக் குறித்து மத்திய அரசின் ஆராய்ச்சி பிரிவான ஐசிஎம்ஆர் ( இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்) இ - சிகரெட் மற்றும் என்ட்ஸ் ஆகியவை பொதுமக்களின் உடல் நலனை முழுமையாக பாதிக்கும் என்பது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இ சிகரெட்டில் திரவ வடிவில் உள்ள நிகோடின் ஆவியாகி உடலுக்குள் செல்கிறது. இதனால் இதை பயன்படுத்துபவரின் உடல் நிலை மற்ற சிகரெட்டுகள் ஏற்படும் அதே பாதிப்பை தான் ஏற்படுத்தும். எனவே இதனை அரசு அனுமதிக்கக் கூடாது.
இ சிகரெட் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்ற விளக்கத்தையும் ஐசிஎம்ஆர் விளக்கியுள்ளது.
‘என்ட்ஸ்’ கருவிகள், திரவ வடிவில் உள்ள நிகோடினை நாம் அளிக்கும் வெப்பம் மூலம் ஆவியாக்குகிறது. இதன் மூலம் உருவாகும் புகையானது நேரடியாக உடலுக்கு செல்கிறது. என்ட்ஸ் போன்ற இ-சிகரெட்கள், ஹீட்-நாட்-பார்ன்-டிவைஸ், வாபே, இ-ஷீஷா, இ-நிகோடின் போன்றவையும் இதில் பயன்படுத்தப்படுகின்றன. இதனை பொதுமக்கள் பயன்படுத்தினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரண சிகரெட்டில் நிகோடின் தவிர 4,000 வேதிப் பொருள்கள் உள்ளன. அவை நச்சுத்தன்மை வாய்ந்தவை. இ-சிகரெட்டில் ஒருசில நச்சுப் பொருள்கள் இருந்தாலும், அதன் வீரியம் குறைவாக இருக்கும். அவற்றை இ-சிகரெட்டில் இருக்கும் ஃபில்ட்டர்கள், ஃபில்ட்டர் செய்துவிடும். அப்படிச் செய்தாலும்கூட இ-சிகரெட்டாலும், நுரையீரல் பாதிப்பு, இதய பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது