Advertisment

மொத்தம் ரூ. 9,000 கோடி பறிமுதல் செய்த தேர்தல் ஆணையம்; பாதி அளவு போதைப் பொருட்கள்

பறிமுதல் செய்யப்பட்ட 5 வகைகளில் 3 வகை பறிமுதல்களில் 5 மாநிலங்களில் கர்நாடகா டாப்பில் உள்ளது. இது 2019-ம் ஆண்டு உடன் ஒப்பிடும்போது, அனைத்திலும் உயர்ந்துள்ளது.

author-image
WebDesk
New Update
seizure

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பறிமுதல் செய்யப்பட்டவைகளின் மொத்த மதிப்பு ரூ.8,889 கோடியை எட்டியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. (Representational Photo)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தேர்தல் ஆணையம் நடப்பு மக்களவைத் தேர்தல் தொடர்பாக வெளியிட்டுள்ள தரவுகளின்படி, மார்ச் 1 முதல் மே 18 வரையிலான காலகட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், போதைப்பொருள், மதுபானம், விலைமதிப்புமிக்க உலோகங்கள் மற்றும் இலவசப் பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.8,889 கோடியை எட்டியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்டவைகளில் கிட்டத்தட்ட பாதி, சுமார் 45%, போதைப் பொருட்களை உள்ளடக்கியது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Total seizures by EC near Rs 9,000 crore; nearly half comprise drugs

அனைத்து வகைகளிலும், 2019 மக்களவைத் தேர்தலில் மொத்தம் ரூ.3,476 கோடி தேர்தல் கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதை விட இரண்டு மடங்கு அதிகமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதிப்பின் அடிப்படையில், ரொக்கப் பறிமுதல் 0.61% அதிகரித்துள்ளது, மதுபானங்கள் பறிமுதல் 167.51%, போதைப் பொருட்கள் 209.31%, விலைமதிப்புமிக்க உலோகங்கள் 27.68% மற்றும் இலவசங்கள் 3,235.93% அதிகரித்துள்ளது.

ரொக்கப் பணம், மதுபானம், போதைப்பொருள், விலைமதிப்புமிக்க உலோகங்கள் மற்றும் இலவசங்கள் மற்றும் பிற பொருட்களை பறிமுதல் செய்ததில் முதல் 5 மாநிலங்கள் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய மாநிலங்களின் ஒப்பீட்டு புள்ளிவிவரங்கள்:

பணம் பறிமுதல்

cash detalils

மதுபானம் பறிமுதல்

liquor

போதைப்பொருள் பறிமுதல்

Drugs

விலைமதிப்புமிக்க உலோகங்கள் பறிமுதல்

precious metal

இலவசப் பொருட்கள் பறிமுதல்

freebies

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Election Commission
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment