Advertisment

புதுச்சேரியில் சுற்றுலாப் பேருந்து அறிமுகம்; 150 ரூபாயில் 21 இடங்களை கண்டு ரசிக்கலாம்

புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக அனைத்து சுற்றுலா தலங் களையும் இணைத்து மினி பஸ் இயக்கப்படுகிறது. நபருக்கு ரூ. 150 கட்டணமும். ஒரு சுற்றுலா இடத்தில் இருந்து அடுத்த இடம் செல்ல குறைந்த பட்ச கட்டணமாக ரூ.10 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
pdy hop on

புதுச்சேரி பி.ஆர்.டி.சி.யில், சிட்டி டூர் என்ற சுற்றுலாத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அடர் சிவப்பு நிறம் பூசப்பட்டுள்ள இந்த பஸ்கள் ஹோப் ஆன், ஹோப் ஆப் என்ற பெயரில் இயக்கப்படுகிறது.

புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக அனைத்து சுற்றுலா தலங் களையும் இணைத்து மினி பஸ் இயக்கப்படுகிறது. நபருக்கு ரூ. 150 கட்டணமும். ஒரு சுற்றுலா இடத்தில் இருந்து அடுத்த இடம் செல்ல குறைந்த பட்ச கட்டணமாக ரூ.10 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக 5 மினி பஸ்கள் புதுப் பிக்கப்பட்டு, எங்கும் ஏறி. இறங்கும் வசதியுடன் இயக்கப்பட உள்ளது.

Advertisment

புதுச்சேரி பி.ஆர்.டி.சி.யில், சிட்டி டூர் என்ற சுற்றுலாத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அடர் சிவப்பு நிறம் பூசப்பட்டுள்ள இந்த பஸ்கள் ஹோப் ஆன், ஹோப் ஆப் என்ற பெயரில் இயக்கப்படுகிறது. ரூ. 150 கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற்றால், புதுச்சேரி மற்றும் அருகில் உள்ள 21 சுற்றுலா தளங்களை இந்த பஸ்சில் பயணித்து கண்டுரசிக்கலாம்.

புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த பேருந்து முதலில்...

தாவரவியல் பூங்கா,

துாய இருதய ஆண்டவர் பசிலிகா,

பாண்டி மெரினா,

பாரதி பூங்கா,

அரவிந்தர் ஆசிரமம்,

அரவிந்தோ சொசைட்டி காகிதம் தயாரிப்பு நிறுவனம்,

முருங்கப்பாக்கம் கைவினை கிராமம்,

அரிக்கன்மேடு,

சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை,

சுண்ணாம்பாறு படகு குழாம்,

தவளக்குப்பம் சிங்கிரிக்குடி லட்சுமிநரசிம்மர் கோவில்,

திருக்காஞ்சி கங்கைவராக நதிஸ்வரர்,

வில்லியனுார் அன்னை ஆலயம்,

திருக்காமீஸ்வரர் கோவில்,

ஊசுட்டேரி பறவைகள் சரணாலயம்,

பாண்லே பால் பண்ணை,

ஆரோவில் மாதீர்மந்தீர்,

ஆரோவில் கடற்கரை,

காமராஜர் மணிமண்டபம்,

லாஸ்பேட்டை அப்துல்கலாம் அறிவியல் கோளரங்கம்

ஆகிய இடங்களை பார்த்து மகிழலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment