/indian-express-tamil/media/media_files/CtmRqX0tzyJh8R7zPTin.jpg)
ஸ்ரீநகரின் தால் ஏரியில் ஷிகாரா சவாரியின் போது சுற்றுலாப் பயணிகள் மது அருந்துவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் மற்றும் மத அமைப்பினர் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். ‘இஸ்லாமுக்கு எதிரானது, நெறிமுறையற்றது’ என்று கூறியுள்ளனர்.
தேசிய மாநாட்டின் தலைமை செய்தித் தொடர்பாளர் தன்வீர் சாதிக் கூறுகையில், “தால் ஏரியில் உள்ள ஷிகாராவில் சுற்றுலாப் பயணிகள் மது அருந்தும் மோசமான செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். 'காஷ்மீர் பாதல் ரஹா ஹை' என்ற போர்வையில், அத்தகைய நடத்தை இங்கு ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும், என்று கூறியுள்ளார்.
"ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் பொது இடங்களில் மது அருந்துவதற்கு தடை விதிக்கும் சட்டங்களை கடுமையாக அமல்படுத்த வேண்டும்," என்று அவர் கூறினார். "எங்கள் விருந்தோம்பல் மக்கள் சுற்றுலாப் பயணிகளை மதிக்கிறார்கள், ஆனால் இஸ்லாத்திற்கு விரோதமான மற்றும் நெறிமுறையற்ற செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறியுள்ளது.
Strongly condemn the vulgar acts of tourists drinking alcohol on a Shikara in Dal Lake.
— Tanvir Sadiq (@tanvirsadiq) June 8, 2024
Under the garb of "Kashmir Badal Raha Hai," the government must remember that such behavior is not acceptable here. A modern society doesn’t dance vulgarly in the streets or drink in public.… pic.twitter.com/mpYQDAnh6u
குலாம் நபி ஆசாத்தின் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சல்மான் நிஜாமியும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். "சூஃபித்துவத்தின் தேசமான காஷ்மீரில் ஷிகாராவில் வெளிப்படையாக மது அருந்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
காஷ்மீரில் உள்ள அனைத்து மதப் பிரிவுகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர்களை உள்ளடக்கிய முத்தஹிதா மஜ்லிஸ்-இ-உலாமா (ஐக்கிய அறிஞர்களின் கவுன்சில்), மிர்வைஸ் உமர் ஃபாரூக் தலைமையிலான அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இது போன்ற செயல்களை கண்காணிக்க ஹோட்டல் உரிமையாளர்கள், படகு மற்றும் ஷிகாரா உரிமையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தது, மேலும் சுற்றுலா பயணிகள் "காஷ்மீரின் தார்மீக மற்றும் மத நெறிமுறைகளை மதிக்க" வலியுறுத்தியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.