Advertisment

அக்டோபர் 10 முதல் காஷ்மீருக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதி

Tourists welcome in Kashmir from October 10: ஜம்மு காஷ்மீர் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக ஆளுநர் சத்யபால் மாலிக், சுற்றுலாப் பயணிகள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வரலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jammu and kashmir,Tourism,Tourism Industry, Tourism and Local Culture

Jammu and kashmir,Tourism,Tourism Industry, Tourism and Local Culture

Tourists welcome in Kashmir from October 10: ஜம்மு காஷ்மீர் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக ஆளுநர் சத்யபால் மாலிக், சுற்றுலாப் பயணிகள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வரலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக ஆளுநர் சத்யபால் மாலிக், சுற்றுலாப் பயணிகள் காஷ்மீருக்கு சுற்றுலாப் பயணிகள் வரலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது அக்டோபர் 10 முதல் நடைமுறைக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய அரசியல் அமைப்பின் 370வது பிரிவை திருத்தி ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியது. இதனால், பாதுகாப்பு காரணங்களுக்காக ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராணுவ பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது. மாநிலத்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான ஒரு முக்கிய படியாக, ஆளுநர் சத்யபால் மாலிக் திங்கள்கிழமை உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையை நினைவு கூர்ந்தார். சுற்றுலாப் பயணிகள் மீண்டும் மாநிலத்திற்கு வரலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 10 முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆய்வு செய்ய நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் திட்டமிடல் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை முதன்மை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில் வட்டார வளர்ச்சி குழு (பி.டி.சி) தேர்தல்கள் குறித்தும் ஆளுநருக்கு விளக்கமளிக்கப்பட்டது. வட்டார வளர்ச்சி குழுவின் தேர்தலில் தீவிர அக்கறை இருப்பதாகவும் வட்டார வளர்ச்சிக் குழு தலைவர்களின் பெரும்பாலான இடங்கள் நிரப்பப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

India Jammu And Kashmir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment